காவல்துறையை இன்று முறையாக வழிநடத்த ஒரு தலைமை இல்லை,அதை சரியாக நியமித்து வழிநடத்த முதல்வருக்கு அக்கறையில்லை - தவெக நிர்மல்குமார்
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வரவில்லை என்றுகூறி ஒரு நபர், நீதிபதியை நோக்கி அரிவாளை வீசிய சம்பவம் அதிர்ச்சியைத் தருகிறது என தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொத
Ctr


Tw


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிப்புத்தூர் குடும்ப நல நீதிமன்றத்தில் தீர்ப்பு தனக்குச் சாதகமாக வரவில்லை என்றுகூறி ஒரு நபர், நீதிபதியை நோக்கி அரிவாளை வீசிய சம்பவம் அதிர்ச்சியைத் தருகிறது என தமிழக வெற்றிக் கழகத்தின் இணை பொதுசெயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

தமிழ்நாட்டின் ஒரு நீதிமன்றத்திற்குள் இப்படியொரு சம்பவம் நடந்திருப்பதும், நீதிபதிக்கே பாதுகாப்பில்லை என்பதுமான பதற்றமான நிலையிலேயே இன்று ஆட்சியின் அவலம் தலைவிரித்தாடுகிறது.

நீதிமன்றம் போன்ற அதிக கண்காணிப்புமிக்க ஒரு இடத்திலேயே ஒருவர் சாதாரணமாக ஆயுதங்களோடு செல்ல முடிகிறது; வன்முறையை கையில் எடுக்க முடிகிறது; காவல்துறையை இன்று முறையாக வழிநடத்த ஒரு தலைமை இல்லை; அதை சரியாக நியமித்து வழிநடத்த முதல்வருக்கு அக்கறையில்லை என்பதையே நடக்கும் சம்பவங்கள் காட்டுகின்றன. மாநிலத்திற்கு ஒரு நிரந்தர சட்டம் ஒழுங்கு டிஜிபி-யை நியமிக்காத நிர்வாகத் திறனற்ற அரசாகவே திமுக அரசு உள்ளது. எந்நேரமும், போட்டோ சூட்டும், ரியாலிட்டி ஷோ-வும் என விளம்பர உலகத்தில் பயணிக்கும் முதல்வருக்கு மக்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் பற்றி தெரியுமா?

வரும் தேர்தலில் கற்பனை உலகில் வாழும் முதல்வருக்கு யதார்த்தம் என்னவென்று மக்கள் பாடம் புகட்டுவார்கள். சட்டம் ஒழுங்கு மற்றும் மக்கள் பாதுகாப்பு பற்றித் துளி அக்கறை கூட இல்லாத திமுக அரசு முடிவுக்கு வருவது உறுதி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ