DMK FILES விவகாரம் - சைதாப்பேட்டை 17 வது குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று குறுக்கு விசாரணை
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) பாஜக மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை, Dmk Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார். அதில், திமுக பொருளாளரும், எம்பி''யு
Trbalu


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

பாஜக மாநில தலைவராக இருந்த போது அண்ணாமலை, Dmk Files என்ற பெயரில் திமுக அமைச்சர்கள் பலரின் சொத்து விவரங்களை கடந்த 2023 ம் ஆண்டு ஏப்ரல் 14 ம் தேதி செய்தியாளர்களை சந்தித்து வெளியிட்டார்.

அதில், திமுக பொருளாளரும், எம்பி'யுமான டி.ஆர் பாலு அவரின் மகனும் அமைச்சருமான டி.ஆர்.பி ராஜா, மற்றும் அவரின் குடும்பத்தாருக்கு மொத்தம் 21 நிறுவனங்கள் சொந்தமாக உள்ளதாக தெரிவித்திருந்தார்.

மேலும் டி.ஆர் பாலு மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு சொத்துக்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

இது தன்னுடைய பெயருக்கும் மற்றும் தன்னுடைய குடும்பத்தினருக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி டி.ஆர் பாலு சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் அண்ணாமலை மீது அவதூறு வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கில் டி.ஆர் பாலுவின் 21 நிறுவனங்கள், சொத்துக்கள் தொடர்பாக அண்ணாமலை தரப்பில் குறுக்கு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்தது.

இந்நிலையில் இந்த வழக்கு

சென்னை பெருநகர சைதாப்பேட்டை

17 வது குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி செந்தில் குமார் முன் இன்று குறுக்கு விசாரணை நடைபெறுகிறது.

Hindusthan Samachar / P YUVARAJ