தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் இன்று பொறுப்பேற்பு
தூத்துக்குடி, 16 பிப்ரவரி (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற
Dr. C. Madhan takes charge


தூத்துக்குடி, 16 பிப்ரவரி (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணியாற்றி வந்த என்.சிலம்பரசன், சென்னை சட்டம் மற்றும் ஒழுங்கு பிரிவின் உதவித் தலைமை காவல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக, திருநெல்வேலி மாநகர மேற்கு பகுதி துணை ஆணையராக இருந்த டாக்டர் சி.மதன், தற்போது தூத்துக்குடி மாவட்டத்தின் புதிய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளராக டாக்டர் சி.மதன் இன்று (பிப்ரவரி 16) பொறுப்பேற்றுள்ளார். முன்னதாக பதவியேற்பு நிகழ்விற்கு வந்த அவரை தூத்துக்குடி மாவட்ட கூடுதல் கண்காணிப்பாளர்கள் திபு மற்றும் ஆறுமுகம், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் உமையொரு பாகம் ஆகியோர் பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.

Hindusthan Samachar / vidya.b