மேற்கு வங்கத்தில் விதிமீறல் - தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!
புதுடெல்லி, 16 பிப்ரவரி (ஹி.ச.) இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது. அதில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகள், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் புரிந்த காரணத்தால் உடனடியாக பணியிடை நீக்கம்
மேற்கு வங்கத்தில் விதிமீறல் - தேர்தல் ஆணையத்தின் அதிரடி நடவடிக்கையால் 7 அதிகாரிகள் பணியிடை நீக்கம்!


புதுடெல்லி, 16 பிப்ரவரி (ஹி.ச.)

இந்திய தேர்தல் ஆணையம் அதிரடியாக ஒரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

அதில், மேற்கு வங்காளத்தைச் சேர்ந்த 7 அதிகாரிகள், சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியில் முறைகேடுகள் புரிந்த காரணத்தால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படுகிறார்கள்.

இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில்,

இந்த அதிகாரிகள் அதிகார துஷ்பிரயோகம் மற்றும் பல்வேறு தவறான செயல்களில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், இவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க மாநில தலைமைச் செயலாளருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

பணியிடை நீக்கம் செய்யப்பட்ட அதிகாரிகளின் பட்டியல்:

* முர்ஷிதாபாத் மாவட்டம், சம்சேர்கஞ்ச் தொகுதியின் உதவி வேளாண்மை துறை இயக்குனர் செபூர் ரஹ்மான்.

* பரக்கா தொகுதியின் வருவாய் அலுவலர் நிதிஷ் தாஸ்.

* மயனாகுரி தொகுதி மகளிர் மேம்பாட்டு அலுவலக அதிகாரி தாலியா ராய் சவுத்ரி.

* சுதி தொகுதியின் உதவி வேளாண் இயக்குனர் முர்ஷித் ஆலம்.

* கானிங் பூர்போ தொகுதியின் இணை வட்டார வளர்ச்சி அலுவலர் சத்யஜித் தாஸ் மற்றும் மீன்வள விரிவாக்க அலுவலர் ஜாய்த்ப் குண்டு.

* தேப்ரா தொகுதியின் இணை வட்டார வளர்ச்சி அலுவலர் தேபாஷிஸ் பிஸ்வாஸ்.

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, சிறப்பு வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிகளுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் போராடி வரும் சூழலில், தேர்தல் ஆணையம் 7 அதிகாரிகள் மீது சஸ்பெண்ட் நடவடிக்கை எடுத்துள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM