Enter your Email Address to subscribe to our newsletters

கோவை, 16 பிப்ரவரி (ஹி.ச..)
கோவை கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில், நியூ கோவை ரியல் எஸ்டேட் நிறுவனம் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி பிரீமியம் வீட்டு மனை திட்டத்தின் துவக்க விழா இன்று நடைபெற்றது.
இத்திட்டத்தை சக்தி குழுமத் தலைவர் எம். மாணிக்கம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார். யுனிவர்சல் ரேடியேட்டர்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. மகேஷ் மாதவன் விழாவில் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.
மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி வீட்டு மனைகள், மேட்டுப்பாளையம் சாலையிலிருந்து 1.3 கிலோமீட்டர் மற்றும் தடாகம் சாலையிலிருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இத்திட்டத்தில் சிறுவாணி குடிநீர் வசதி, தார்சாலை, தெருவிளக்குகள், இயற்கை சூழல், அடித்தள வடிகால் அமைப்பு, சுற்றுச்சுவர், மேம்படுத்தப்பட்ட பூங்கா, பிக்கிள்பால் மைதானம், நடைபாதை உள்ளிட்ட பல நவீன வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
மாவட்ட நகரமைப்பு திட்ட ஒப்புதல் மற்றும் நில ஆவண ஒழுங்குமுறை அங்கீகாரம் பெற்ற இத்திட்டம், வாஸ்து முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்ட வீட்டு மனை பகுதிகளைக் கொண்டதாகும். மொத்தம் 53 வீட்டு மனைகள் கொண்ட இத்திட்டம், பாதுகாப்பான மற்றும் அமைதியான சூழலில், நவீன வசதிகளுடன் குடியிருப்பதற்கான சிறந்த வாய்ப்பாக அமைந்துள்ளது.
விழாவில் உரையாற்றிய சக்தி குழுமத் தலைவர் எம். மாணிக்கம்,
பவுண்டேஷன் ஒன் குழுமத்தின் தலைமை பொறுப்பை திரு.ராஜ்குமார் அவர்கள் ஏற்று சிறப்பாக வழிநடத்தி வருகிறார்.
கவுண்டம்பாளையம் பி & டி காலனி பகுதியில் உருவாக்கப்பட்டுள்ள மகாலிங்கங்கபுரம் ஸ்மார்ட் சிட்டி திட்டம், சுமார் 3.75 ஏக்கர் பரப்பளவில் விரிவாக வடிவமைக்கப்பட்ட பிரீமியம் வீட்டு மனை திட்டமாகும். வாடிக்கையாளர்களிடமிருந்து பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள இத்திட்டத்தில், தற்போது 50 சதவீத வீட்டு மனைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இந்த துவக்க விழாவில் பொதுமக்கள், வாடிக்கையாளர்கள் மற்றும் நிறுவன நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam