Enter your Email Address to subscribe to our newsletters

திருப்பூர், 16 பிப்ரவரி (ஹி.ச.)
திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த ஆட்டையம்பாளையம் பகுதியில் இருந்து அன்னூர் வழியாக மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் சாலையில் சாலை விரிவாக்க பணி நெடுஞ்சாலை துறையினரால் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அவிநாசி அன்னூர் சாலை விரிவாக்க பணி முடிந்து நெடுஞ்சாலை துறையினரால் சாலையில் வெள்ளை கோடு வரையும் பணி தற்போது நடைபெற்று வருகிறது.
இதில் இன்று காலை இருவழிப் பாதையாக இருந்த அவிநாசி அன்னூர் சாலையில் ஒரு வழி பாதையாக மாற்றியுள்ளனர்.
இந்நிலையில் அவிநாசி மங்கலம் ரோடு பகுதியைச் சேர்ந்த பிரபு என்பவர் அன்னூரில் இருந்து அவிநாசிக்கு காரில் வந்து கொண்டிருக்கும் பொழுது அவர் பயணிக்கும் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டது தெரியாமல் முன்னே சென்ற காரை முந்துவதற்காக வலது புறம் முன்னேறி செல்கையில் வளைவு பகுதியில் எதிரே வந்த லாரி மீது கார் மோதியது.
கார் லாரி மீது மோதிய வேகத்தில் காருக்கு அருகாமையில் வந்து கொண்டிருந்த இருசக்கர வாகனங்களில் மீது கார் இடித்ததால் இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் சாலையோரத்தில் விழுந்தனர்.
மேலும் கார் ஓட்டி வந்த பிரபு சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார்,
கார் இடித்து கீழே விழுந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களும் இரண்டு ஆண் ஒரு பெண் உட்பட மூன்று பேர் லேசான சிராய்ப்பு காயங்களுடன் உயிர் தப்பினர்.
தொடர்ந்து விபத்து நடைபெற்ற பகுதியின் அருகாமையில் இருந்த சிசிடிவியில் விபத்து நடைபெற்ற காட்சிகள் பதிவாகி இருந்தது.
இதில், லாரி மீது கார் மோதி அந்தக் கார் இருசக்கர வாகனத்தின் மீது மோதி இருசக்கர வாகனத்தில் வந்தவர்கள் கீழே விழுந்த காட்சி பதிவாகி உள்ளது.
தொடர்ந்து கீழே விழுந்தவர்களுக்கு அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் முதலுதவி செய்து அவர்களை காப்பாற்றிய காட்சி உள்ளது.
விபத்து குறித்த தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த அவிநாசி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்து குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Hindusthan Samachar / GOKILA arumugam