எப்சி கட்டண உயர்வை கண்டித்து திருவாரூர் மாவட்டத்தில் 3000 லாரிகள் கால வரையற்ற வேலை நிறுத்தம்
திருவாரூர், 16 பிப்ரவரி (ஹி.ச.) மத்திய அரசு கனரக வாகனங்களுக்கு எப்சி எனப்படும் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் பழைய கட்டணம் அனைத்து வகையான லாரிகளுக்கும
வேலை நிறுத்தம்


திருவாரூர், 16 பிப்ரவரி (ஹி.ச.)

மத்திய அரசு கனரக வாகனங்களுக்கு எப்சி எனப்படும் தகுதிச் சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணத்தை உயர்த்தி உள்ளதால் லாரி உரிமையாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் மேலும் பழைய கட்டணம் அனைத்து வகையான லாரிகளுக்கும் ஒரே மாதிரி இருந்து வந்த நிலையில் தற்பொழுது உயர்த்தி உள்ள கட்டணம் லாரியின் ஆண்டுக்கு தகுந்தார் போல் எப் சி கட்டணத்தை உயர்த்தி உள்ளதாகவும் ஏற்கனவே அனைத்து வகையான லாரிகளுக்கும் 850 ரூபாய் கட்டணம் இருந்து வந்த நிலையில் தற்போது அதிகபட்சமாக 20 வருடத்திற்கு மேலான லாரிகளுக்கு 28,250 ரூபாய் வரை கட்டணம் உயர்ந்துள்ளதாக கூறி திருவாரூர் மாவட்ட லாரி உரிமையாளர்கள் சங்கம் சார்பில் உடனடியாக அதனை திரும்பப் பெற வலியுறுத்தியும் திருவாரூர் மாவட்டத்தில் 3000 க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கால வரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக நியாய விலை கடைகளுக்கு அரிசி ஏற்றும் பணிகளும் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை இயக்கம் செய்யும் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து 500க்கும் மேற்பட்ட லாரி உரிமையாளர்கள் கடந்த 12ம் தேதி திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஊர்வலமாக வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்திருந்த நிலையில் அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் 16ம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபட போவதாக அறிவித்திருந்தனர்.

அதன் அடிப்படையில் இன்று முதல் திருவாரூர் மாவட்டத்தில் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் லாரி உரிமையாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக திருவாரூர் மாவட்டத்தில் 3000 லாரிகள் இயக்கம் என்பது நிறுத்தப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam