மகா சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பக்தர்கள் வீட்டுக்கு சென்ற போது விபத்து - தம்பதி உயிரிழப்பு
புதுக்கோட்டை, 16 பிப்ரவரி (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே புறங்காடு என்னும் இடத்தில் நெடுங்குடி கைலாசநாதர் கோவில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பக்தர்கள் வீட்டுக்கு செல்கின்ற போது, அவர்கள் சென்ற டாடா ஏசி பிக்கப் வாகனம
Accident


புதுக்கோட்டை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே புறங்காடு என்னும் இடத்தில் நெடுங்குடி கைலாசநாதர் கோவில் மகா சிவராத்திரி நிகழ்ச்சியை முடித்துவிட்டு பக்தர்கள் வீட்டுக்கு செல்கின்ற போது, அவர்கள் சென்ற டாடா ஏசி பிக்கப் வாகனம் ஓட்டுனர் கட்டுப்பாட்டை இழந்து புறங்காடு சாலை ஓரத்தில் உள்ள மரத்தில், மோதியதில் வாகனத்தில் வந்த 15 இருக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

உடனே அருகில் இருந்தவர்கள் மீட்டு அறந்தாங்கி அரசு தலைமை மருத்துவமனைக்கு 108 ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் ரமேஷ் மற்றும் கனிமொழி ஆகிய கணவன் மனைவி இருவரும் இறந்துவிட்டனர் என மருத்துவர் கூறியதால் உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

குறிப்பாக வாகனத்தில் வந்தவர்கள் படுகாயம் அடைந்ததால் மேல் சிகிச்சைக்காக சிலர் புதுக்கோட்டைக்கும் அனுப்பி வைத்துள்ளனர்

சிவன் ராத்திரி திருவிழா முடித்துவிட்டு வீடு திரும்பிய ஒரே கிராமத்தை சேர்ந்தவர்கள் விபத்து ஏற்பட்டு கனவர் மனைவி இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்பட்டுள்ளது.

இந்த சம்பவம் குறித்து நாகுடி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / ANANDHAN