Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
2026-27 ஆம் நிதியாண்டுக்கான தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை
(பிப்ரவரி 17 ஆம் தேதி) தாக்கல் செய்யப்படும் என சட்டப்பேரவைத் தலைவர் மு. அப்பாவு ஏற்கெனவே அறிவித்துள்ளார்.
தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளதையடுத்து திமுக ஆட்சியின் இடைக்கால நிதிநிலை அறிக்கை நாளை தாக்கல் செய்யப்படவுள்ளது.
அதன்படி 2026-27 ஆம் ஆண்டுக்கான இடைக்கால நிதிநிலை அறிக்கையை நாளை காலை 9.30 மணிக்கு நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்வார். தொடர்ந்து எத்தனை நாள்கள் அவை செயல்படும் என்பது இன்று (பிப்ரவரி 16) நடைபெறும் அலுவல் ஆய்வுக் கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.
இந்நிலையில் நாளை இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்படவுள்ள நிலையில், சட்டப்பேரவையில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு இன்று (பிப்ரவரி 16) ஆய்வு செய்தார்.
பேரவை உறுப்பினர்கள் அனைவரும் நாளை வரவுள்ளதால் சட்டப்பேரவை மேசை, மைக், இருக்கைகள் என செய்யப்பட்டுள்ள அனைத்து முன்னேற்பாடுகளையும் ஆய்வு செய்தார்.
இந்த ஆய்வின் போது உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியனும் உடனிருந்தார்.
Hindusthan Samachar / vidya.b