பிப்ரவரி 18 ஆம் தேதி முதுநிலை ஆசிரியர்களுக்கான ஒருநாள் பயிற்சி - பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கடந்த 13-ம் தேதி வழங்கினார். புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து முத
teachers on February 18th -


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழகத்தில் அரசு மேல்நிலைப் பள்ளிகளுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் (டிஆர்பி) மூலம் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதல்வர் ஸ்டாலின் சென்னையில் கடந்த 13-ம் தேதி வழங்கினார். புதிதாக நியமிக்கப்பட்ட அனைத்து முதுநிலை ஆசிரியர்களும் மருத்துவச் சான்றுடன் இன்று முதல் (பிப்.16) தங்களுக்கான பள்ளிகளுக்குச் சென்று பணியில் சேர தொடங்கியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, இவர்களுக்கான ஒருநாள் பயிற்சி சென்னையில் வரும் 18-ம் தேதிநடைபெற உள்ளது.

இது தொடர்பாக மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது,

புதிதாக நியமனம் பெற்று பணியில் சேர்ந்த கோவை, கன்னியாகுமரி உள்ளிட்ட 26 மாவட்டங்களைச் சேர்ந்த 1,021 ஆசிரியர்களுக்கு சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பிப்ரவரி 18-ம் தேதி புதுமுகப் பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது.

பயிற்சியை அமைச்சர் அன்பில் மகேஸ் தொடங்கி வைக்க உள்ளார். இந்த விவரத்தை சம்பந்தப்பட்ட ஆசிரியர்களுக்கு முதன்மைக் கல்வி அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.

என்று அதில் கூறப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / vidya.b