இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி பொதுக்குழு கூட்டம்
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன. பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ
இன்று பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி பொதுக்குழு கூட்டம்


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக சட்டசபைக்கு தேர்தல் நடைபெற இன்னும் ஒரு சில மாதங்களே உள்ளன. இதனை முன்னிட்டு பல்வேறு கட்சிகளும் தீவிர அரசியல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றன.

பாட்டாளி மக்கள் கட்சியில் டாக்டர் ராமதாஸ், அவரது மகன் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே நீண்ட நாள்களாக கருத்து வேறுபாடு நிலவி வருகின்றது. இதன் காரணமாக கட்சி நிர்வாகிகள் இரு பிரிவுகளாகச் செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது கட்சியின் பெரும்பான்மையான ஆதரவு அன்புமணி வசம் இருப்பதால், அக்கட்சியும் அதன் சின்னமான மாம்பழமும் அவரது கட்டுப்பாட்டிலேயே உள்ளன. அதனைத்தொடர்ந்து, அன்புமணி ராமதாஸ் தன்னிச்சையாக அதிமுக கூட்டணியில் இணைந்துள்ளார்.

அன்புமணி ராமதாஸ் தலைமையிலான பா.ம.க. அணி, அ.தி.மு.க. தலைமையிலான என்.டி.ஏ. கூட்டணியில் இணைந்து தேர்தலை சந்திக்க உள்ளன.

இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் மாணவரணி பொதுக்குழு கூட்டம் இன்று (பிப்ரவரி 16-ந்தேதி) காலை 10 மணிக்கு சென்னை பல்லாவரம் ரேடியல் சாலையில் உள்ள அருள் முருகன் டவர்ஸ் அரங்கத்தில் நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளார்.

Hindusthan Samachar / vidya.b