Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)
திருவொற்றியூர் ரயில் நிலையம் பகுதியில் மது போதையில் அட்ராசிட்டியில் ஈடுபட்டதாக கூறப்படும் இளைஞரை பிடித்த ஆர்.பி.எப் ரயில்வே போலீசார் கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
நடைமேடையில் பொதுமக்கள் முன்னிலையில் இளைஞரை தரையில் தள்ளி வைத்து, கழுத்தில் கால் வைத்து கடுமையாக தாக்கக்கூடிய காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகின்றன.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியதையடுத்து பல்வேறு தரப்பில் கண்டனம் எழுந்துள்ளது.
RPF போலீசாரின் நடவடிக்கை குறித்து விசாரணை நடத்தப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Hindusthan Samachar / GOKILA arumugam