Enter your Email Address to subscribe to our newsletters

பிவாடி, 16 பிப்ரவரி (ஹி.ச.)
ராஜஸ்தானின் பிவாடியில் உள்ள ஒரு ரசாயன தொழிற்சாலையில் இன்று ஏற்பட்ட பெரும் தீ விபத்தில் ஏழு தொழிலாளர்கள் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
இரண்டு தொழிலாளர்கள் இன்னும் வளாகத்திற்குள் சிக்கியுள்ளதாக நம்பப்படுகிறது.
பிவாடியின் குஷ்கேரா-கரோலி தொழில்துறை பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்ததால், உடனடி அவசர நடவடிக்கை எடுக்கப்பட்டது.
வழக்கமான ரோந்துப் பணியின் போது அதிகாரிகள் தீ விபத்து குறித்து அறிந்ததாகவும், அதன் பிறகு மீட்பு நடவடிக்கைகள் தாமதமின்றி தொடங்கப்பட்டதாகவும் கூடுதல் மாவட்ட நீதிபதி சுமிதா மிஸ்ரா கூறினார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியது,
ஒன்பது பேர் உள்ளே சிக்கினர். இதுவரை ஏழு உடல்கள் வெளியே எடுக்கப்பட்டன. மீதமுள்ள இரண்டு தொழிலாளர்களை மீட்க தீவிர முயற்சிகள் நடந்து வருகிறது.
என்று கூறினார்
கல்கத்தாவின் கிழக்கு புறநகர்ப் பகுதியில் உள்ள ஒரு சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் பல உயிர்கள் பலியாகிய வங்காளத்தில் நடந்தது போல், ராஜஸ்தானில் உள்ள பாஜக அரசு பொறுப்பேற்கக் கோரப்படுமா என்று வங்காளத்தில் ஆளும் திரிணாமுல் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM