Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச)
டாஸ்மாக் ஊழியர்கள் பணி நிரந்தம், ஒய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 1ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
இவர்களது போராட்டத்திற்கு சிஐடியு, ஏஐடிசி உள்ளிட்ட முக்கிய தொழிற்சங்கங்கள் கூட்டாக இணைந்து நடத்துகின்றன. இதற்கு பல்வேறு அரசியல் கட்சிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் இந்த போராட்டத்தை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளனர்.
அரசு இதுவரை அழைத்து பேச்சுவார்த்தைக்கு அழைக்காததால் நாளை (பிப்ரவரி 17ம் தேதி )முதல் மாநிலம் தழுவிய காலவரையற்ற கடையடைப்பு போராட்டத்தை நடத்த டாஸ்மாக் கூட்டமைப்பு சங்கம் முடிவெடுத்துள்ளன.
இதற்கான நோட்டீஸ் டாஸ்மாக் மேலாண்மை இயக்குநரிடம் வழங்கப்பட்டுள்ளது.
இந்த வேலைநிறுத்த போராட்டத்தில் அதிமுகவின் அண்ணா தொழிற்சங்கம் பங்கேற்குமா என்பது இன்னும் முடிவாகவில்லை.
இதுகுறித்து தலைமையிடம் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்று அதன் மாநில செயலாளர் தெரிவித்துள்ளார்.
ஒருவேளை அவர்களும் இணைந்தால், போராட்டம் மேலும் வலுவடையும். தமிழ்நாட்டில் தற்போது 4,749 டாஸ்மாக் கடைகள் உள்ளன. இவற்றில் சுமார் 23,000 ஊழியர்கள் பணியாற்றுகின்றனர்.
இவர்கள் அனைவரும் ஒரே நேரத்தில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டால், மது விற்பனை முற்றிலுமாக முடங்கும் அபாயம் உள்ளது.
Hindusthan Samachar / vidya.b