தூத்துக்குடி அருகே பைக் மீது வேன் மோதி விபத்து - இரண்டு சிறு குழந்தைகள் உட்பட 5 - பேர் உயிரிழப்பு
எட்டயபுரம், 16 பிப்ரவரி (ஹி.ச.) தூத்துக்குடி மாவட்டத்தின் அருகே அமைந்திருக்கும் விளாத்திகுளம் பகுதியின் பல்லாக்குளம் கிராமத்தில் வசித்து வந்தவர் குருசாமி (வயது 40). இவர் ஒரு லாரி ஓட்டுநர். திருமணமான இவருக்கு மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். மனஸ்தா
தூத்துக்குடிக்கு அருகில் வேன் மோதியதால் பைக் நொறுங்கி இரண்டு சிறு குழந்தைகள் உட்பட ஐவர் மரணம்


எட்டயபுரம், 16 பிப்ரவரி (ஹி.ச.)

தூத்துக்குடி மாவட்டத்தின் அருகே அமைந்திருக்கும் விளாத்திகுளம் பகுதியின் பல்லாக்குளம் கிராமத்தில் வசித்து வந்தவர் குருசாமி (வயது 40).

இவர் ஒரு லாரி ஓட்டுநர். திருமணமான இவருக்கு மனைவியும் பிள்ளைகளும் உள்ளனர். மனஸ்தாபம் காரணமாக அவருடைய மனைவி அவரை விட்டு பிரிந்து தனியாக சென்றுவிட்டார். ஆகையால் குருசாமி தன்னுடைய பிள்ளைகளுடன் தற்பொழுது குளத்தூர் சுந்தரலிங்கம் நகரில் வாழ்ந்து வந்தார். தன் பிள்ளைகளை கவனித்துக்கொள்வதற்காக ஒரு பெண்ணையும் அவர் வேலைக்கு வைத்துக் கொண்டிருந்தார்.

குருசாமி தன்னுடைய உடன் பிறந்த சகோதரர் முனியசாமியின் புதல்வர்களான முகிலரசன் (வயது 5), சுமித்ரன் (வயது 3), உடன்பிறந்த சகோதரி முத்துலட்சுமி (வயது 48), மற்றும் வேலை செய்யும் பெண் ஆகியோரை ஒரே இரு சக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு விளாத்திகுளத்தில் உள்ள தன்னுடைய சொந்தக்காரர் வீட்டுக்கு சென்று விட்டு மீண்டும்,அந்த ஐந்து பேரும் குளத்தூருக்கு திரும்பிக்கொண்டு இருந்தனர்.

கிழக்கு கடற்கரை சாலையில் விளாத்திகுளம் அருகில் உள்ள வைப்பார் என்னும் ஊரின் அருகே அவர்கள் சென்று கொண்டிருந்தபோது, எதிர்ப்புறமாக சாயல்குடியிலிருந்து தூத்துக்குடியை நோக்கி ஒரு உல்லாசப் பயணிகள் வேன் வந்து கொண்டிருந்தது.

ஒரு நொடிப் பொழுதில் அந்த வேன் யாரும் எதிர்பாராத விதமாக குருசாமி ஓட்டி வந்த பைக் மீது பயங்கரமாக மோதியது. இந்த விபரீதமான விபத்தில் குருசாமி, முகிலரசன், சுமித்ரன், முத்துலட்சுமி, பணிப்பெண் உட்பட ஐந்து பேரும் தூக்கி எறியப்பட்டு அந்த இடத்திலேயே இறந்தனர்.

இந்த விபத்து குறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் வேன் ஓட்டுநரிடம் தீவிர விசாரணை நடந்து கொண்டிருக்கிறது.

Hindusthan Samachar / JANAKI RAM