அருணாசலேஸ்வரர் கோவிலில் பாடகர் வேல்முருகன் சுவாமி தரிசனம்
திருவண்ணாமலை, 16 பிப்ரவரி (ஹி.ச.) திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோவிலில் திரைப்படப் பாடகர் வேல்முருகன் மனமுருக சாமி
Velmurugan


திருவண்ணாமலை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள உலக பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும், நினைத்தாலே முக்தி தரும் திருத்தலமாகவும் விளங்கக்கூடிய அருணாசலேஸ்வரர் கோவிலில் திரைப்படப் பாடகர் வேல்முருகன் மனமுருக சாமி தரிசனம் செய்து அண்ணாமலையார் பாடலை பாடி வழிபட்டார்.

அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாக திரை பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் மற்றும் முக்கியஸ்தர்கள் என பல லட்சக்கணக்கான பக்தர்கள் அண்ணாமலையாரை வழிபடுவதற்காக வருகின்றனர்.

அந்த வகையில் இன்று சுப்ரமணியபுரம் படத்தில் மதுர குலுங்க குலுங்க, நாடோடிகள் படத்தில் ஆடுங்கடா என்னசுத்தி, ஆடுகளம் படத்தில் ஒத்த சொல்லால போன்ற நாட்டுப்புற பாடல்களைப் பாடி புகழ் பெற்ற பாடகர் வேல்முருகன் அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு வருகை புரிந்து முதலில் சம்மந்த விநாயகர் வழிபட்டு பின்னர் அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலை அம்மனை வழிபட்டார்.

அதனை தொடர்ந்து கோவில் நிர்வாகம் சார்பில் சிவாச்சாரியார்கள் மாலை அணிவித்து பிரசாதங்களை வழங்கினர், தொடர்ந்து கோவில் ஊழியர்கள் மற்றும் கோவிலுக்கு சாமி தரிசனம் மேற்கொள்ள வந்த பக்தர்கள் செல்பி எடுத்தும் மகிழ்ந்தனர்.

அதனைத் தொடர்ந்து அருணாச்சலேஸ்வரர் கோவிலின் மூன்றாம் பிரகாரத்தில் அமைந்துள்ள மகிழ மரம் அருகே நின்று அண்ணாமலையார் பாடலை மனம் உருக பாடினார்.

Hindusthan Samachar / ANANDHAN