விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு இந்தியாவில் விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி வைகோ தொடர்ந்த வழக்கு - பிப்ரவரி 26ஆம் தேதிக்கு தள்ளிவைப்பு
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச) விடுதலைப் புலிகள் இயக் கத்துக்கு இந்தியாவில் விதிக் கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. விடுதலைப் பு
Pid


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச)

விடுதலைப் புலிகள் இயக் கத்துக்கு இந்தியாவில் விதிக் கப்பட்ட தடையை நீக்கக் கோரி மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தொடர்ந்த வழக்கு பிப்ரவரி 26 ஆம் தேதிக்கு தள்ளிவைத்து

சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு விதிக்கப்பட்ட தடையை தீர்ப்பாயம் நீட்டித்து உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வழக்கு தொடர்ந்தார்.

நீதிபதிகள் அனிதா சுமந்த் மற்றும்

சுதிர் குமார்

அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக் வந்தது.

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ நேரில் ஆஜராகி இருந்தார். அப்போது வழக்கு விசாரணையை தள்ளிவைக்கும்படி

வைகோ கோரிக்கை வைத்தார்.

வழக்கு விசாரணையை நீதிபதிகள் வருகிற 26 ஆம் தேதி 2 .15 மணிக்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்

Hindusthan Samachar / P YUVARAJ