தென்காசி இந்தியன் வங்கியில் திடீர் தீ விபத்து
தென்காசி, 16 பிப்ரவரி (ஹி.ச.) தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் இயங்கி வரும் இந்தியன் வங்கி கிளை அலுவலகத்திலிருந்து இன்று அதிகாலை நேரத்தில் ஜன்னல் வழியாக கரும்புகை வந்துகொண்டிருந்தது. இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக
fire accident at Indian Bank, Tenkasi


தென்காசி, 16 பிப்ரவரி (ஹி.ச.)

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் பேருந்து நிலையம் இயங்கி வரும் இந்தியன் வங்கி கிளை அலுவலகத்திலிருந்து இன்று அதிகாலை நேரத்தில் ஜன்னல் வழியாக கரும்புகை வந்துகொண்டிருந்தது.

இதை கவனித்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக போலீசார் மற்றும்ட் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.இதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு துறையினர் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்து வருகிறார்கள்.

பேருந்து நிலையம் அருகே உள்ள வங்கி என்பதால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சங்கரன்கோவிலில் உள்ள சிவன் கோவிலில் நேற்று இரவு சிவராத்திரையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

இதற்காக விடிய விடிய சிவ பக்தர்களும் கோவிலில் குவிந்து இருந்தனர். பூஜைகள் முடிந்த நிலையில் வீட்டிற்கு செல்ல இருசக்கர வாகனங்கள், பேருந்துகளில் அதிகளவு கூட்டம் இருந்தது. இந்த நிலையில் தான் தீ விபத்தின் காரணமாக கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு இருக்கிறது.

இந்தியன் வங்கியில் ஏற்பட்ட தீ விபத்திற்கு என்ன காரணம் என தெரியவில்லை. இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Hindusthan Samachar / vidya.b