பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மின்தடை
சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.) சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் இன்று (பிப்ரவரி 16) மின் தடை செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் இன்று (16.02.2026) காலை 9 மணி முதல் ப
பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் இன்று ஒரு சில இடங்களில் மின்தடை


சென்னை, 16 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் இன்று

(பிப்ரவரி 16) மின் தடை செய்யப்படுகிறது என தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அதன்படி, சென்னையில் இன்று (16.02.2026) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

மின்தடை ஏற்படும் இடங்கள் பின்வருமாறு:

ராமாபுரம்: மங்களா நகர், அம்பாள் நகர், போரூர், மவுண்ட் பூந்தமல்லி ரோடு, ஆர்.இ.நகர், வன்னியர் தெரு.

அம்பத்தூர்: மணலோடை தெரு, பத்மா சீனிவாச நகர், சரஸ்வதி நகர், லெனின் நகர், ஏரிக்கரை சாலை, வெங்கடேஸ்வரா நகர்.

வியாசர்பாடி: இஎச் சாலை, பிவி காலனி, சாஸ்திரி நகர், இந்திரா நகர் விரிவாக்கம், வியாசர்பாடி தொழிற்பேட்டை, காந்தி நகர், ஸ்டீபன் சாலை, வியாசர் நகர், புதுநகர் முக்கிய தெருக்களில் எம்பிஎம் தெரு, மார்க்கெட் தெரு, சென்ட்ரல் கிராஸ் தெரு 10 முதல் 19 வரை, கிழக்கு குறுக்குத் தெரு 10 முதல் 19 வரை, எம்கேபி நகர் 1 முதல் 8வது மெயின் ரோடு, எம்கேபி நகர், கல்யாண்புரம், சத்தியமூர்த்தி நகர் 1 முதல் 25வது தெரு, சாமியார்தோட்டம் 1 முதல் 4வது தெரு, பல்லையா தெரு 1 முதல் 4வது தெரு வரை, உதய சூரியன் நகர், எஸ்.ஏ. காலனி, சர்மா நகர்.

என மின்பகிர்மானக் கழகம் தெரிவித்துள்ளது.

Hindusthan Samachar / vidya.b