Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பில் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொது செயலாளர் ராஜ்மோகன் ஆதரவு தெரிவிப்பதற்காக வருகை தந்திருந்தார்.
இதன்பிறகு செய்தியாளர்களை சந்தித்த அவர் பேசியதாவது,
தமிழக வெற்றிக் கழகம் அரசு ஊழியர்கள் சங்கம் நடத்தும் அனைத்து கோரிக்கைகளின் ஆர்ப்பாட்டத்திற்கு முழு ஆதரவு வழங்குகிறது.
திமுக கடந்த தேர்தலின் போது கொடுத்த வாக்குறுதிகளை தான் இவர்கள் கேட்கிறார்கள். அரசிற்கு உழைத்தவர்கள் மிகவும் சிரம படுகிறார்கள்.
இது வெறும் வாக்குகளுக்காக மட்டும் நான் வரவில்லை. நான் ஒரு சத்துணவு ஊழியரின் மகன். என் அம்மா சத்துணவு ஊழியர். குழந்தைகள் பசியாற்ற வேண்டும் என்று உழைப்பவர்கள்.
இது வெறும் தேர்தல் ஆதாயத்திற்காக மட்டுமில்லை. அரசியல் தாண்டி அடிப்படை மனிதாபமானத்தோடு செயல்பட வேண்டும்.என்றார்.
Hindusthan Samachar / P YUVARAJ