இந்திய அரசியல்சாசனம் மற்றும் சட்டங்களின் துணையுடன் திமுக-வின் போலி வழக்குகளை தகர்த்தெறிவேன் - பாஜக எஸ்.ஜி.சூர்யா
சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச) தி.மு.க ஆட்சி என் மீது உச்சக்கட்ட அடக்குமுறைகளை தொடர்ந்து ஏவி வருகிறது என தமிழக பாஜகமாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது, கொடு
Sg


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச)

தி.மு.க ஆட்சி என் மீது உச்சக்கட்ட அடக்குமுறைகளை தொடர்ந்து ஏவி வருகிறது என தமிழக பாஜகமாநில இளைஞரணி தலைவர் எஸ்.ஜி.சூர்யா எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,

கொடுங்கோல் ஆட்சி, சர்வாதிகார ஆட்சிகளை படித்திருக்கிறேன், படங்களிலும் பார்த்திருக்கிறேன். ஆனால் தற்போது நேரடியாக அனுபவமடைகின்ற அளவு தமிழகத்தில் தி.மு.க ஆட்சி என் மீது உச்சக்கட்ட அடக்குமுறைகளை தொடர்ந்து ஏவி வருகிறது.

கடந்த 4 ஆண்டுகளில் தற்போது என் மீது 12-வது வழக்கை பதிந்துள்ளது தி.மு.க அரசு. இதில் சிறப்பு என்னவெனில், தமிழக அரசு தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கொடுத்த ஒரு தரவை சேலம் மகளிரணி ஆர்ப்பாட்டத்தில் சமீபத்தில் மேற்கோள்காட்டி பேசியதற்காக வழக்கு பதிவு செய்யப்பட்டு தற்போது மற்றொரு கைதை நிகழ்த்த காவல்துறைக்கு தி.மு.க அரசு அழுத்தம் கொடுப்பதாக தெரிகிறது.

உண்மைகளை பேசினால் வழக்கு மற்றும் கைது, தி.மு.க-வினர் என்னை தாக்கினாலும், அதற்கான வீடியோ ஆதாரம் இருந்தாலும் என் மீதே வழக்கு மற்றும் கைது, தி.மு.க ஆட்சியின் தவறுகளை சுட்டிக்காட்டினால் வழக்கு மற்றும் கைது, தொலைகாட்சி விவாதங்களில் கலந்துக்கொண்டு தரவுகளை பேசினால் வழக்கு மற்றும் கைது, பொது மேடைகளை தி.மு.க-வின் தவறுகளை சுட்டிக்காட்டினால் வழக்கு மற்றும் கைது, தி.மு.க கூட்டணி கட்சிகளின் இரட்டை நிலைபாடுகளை சுட்டிக்காட்டினால் வழக்கு மற்றும் கைது என இனி என் மீது அரசியல் காழ்ப்புணர்ச்சி வழக்குகளை பதிவு செய்வதற்கு புதிய ஷரத்துக்களே இல்லாத அளவிற்கு நாளொரு வழக்கும், பொழுதொரு கைதுமென இந்த கொடுங்கோல் ஆட்சி என்னை தாக்கி வருகிறது.

இந்திய அரசியல்சாசனம் மற்றும் சட்டங்களின் துணையுடன் இந்த போலி வழக்குகள் தகர்த்தெறிவேன். காலங்கள் மாறும், காட்சிகளும் மாறும்.

எப்போதும் எனக்கு உற்ற ஆதரவு அளிக்கும் பாரதிய ஜனதா கட்சிக்கும், உடனிருக்கும் அனைத்து தலைவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Hindusthan Samachar / P YUVARAJ