மாசி மாத அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்திற்கு திதி கொடுக்க திரளான பக்தர்கள் வருகை
ராமநாதபுரம், 17 பிப்ரவரி (ஹி.ச.) உலக பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிவராத்திரி, சுவாமி, அம்
Devotees throng Rameswaram


ராமநாதபுரம், 17 பிப்ரவரி (ஹி.ச.)

உலக பிரசித்தி பெற்ற ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கடந்த 8 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக சிவராத்திரி, சுவாமி, அம்பாள் தேரோட்டம் நிறைவடைந்தது.

இதனையடுத்து, இன்று (பிப்ரவரி 17) மாசி மாத மறைநில அமாவாசையை முன்னிட்டு பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கனக்கான பக்தர்கள் ராமேஸ்வரம் வருகை தந்தனர்.

தம்மோடு வாழ்ந்து மறைந்த முன்னோர்களுக்கு திதி மற்றும் தர்ப்பணம் கொடுத்து அக்னி தீர்த்தக் கடலில் நீராடினர். இதனைத் தொடர்ந்து, ராமநாதசுவாமி கோயிலில் உள்ள 22 தீர்த்த கிணறுகளில் நீண்ட வரிசையில் நின்று நீராடினர். இதன் பின்னர் சுவாமி தரிசனம் செய்தனர்.

பக்தர்களின் வருகையை முன்னிட்டு இந்து சமய அறநிலைத்துறையினர் விரிவாக ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

கூடுதல் பாதுகாப்புப் பணியில் 200-க்கும் மேற்பட்ட போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Hindusthan Samachar / vidya.b