Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அவசர செயற்குழுக் கூட்டம், கட்சியின் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன் தலைமையில் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.
இதனையடுத்து செய்திகளர்களை சந்தித்த கே.எம்.காதர் மொகிதீன்,
சட்டமன்ற தேர்தலில் தொடர்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில அவசர செயற்குழு கூட்டம் நடைபெற்றது. திமுக கூட்டணியில் தொடர்கிறோம். இந்த ஆட்சி தொடர வேண்டும் என இந்த கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளோம்.
கடந்த முறை 3 தொகுதிகள் கேட்டு வெற்றி பெற முடியவில்லை. ஆனால் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்றுள்ளோம். வரும் தேர்தலில் முஸ்லீம் சமுதாயத்திற்கு 16 தொகுதிகளும், எங்கள் கட்சிக்கு 5 தொகுதிகளும் ஒதுக்க வேண்டும் என கேட்போம். திமுக கூட்டணியில் அதிகாரத்தில் பங்கு என்பது எங்களது கோரிக்கை இல்லை
ஆட்சியில் பங்கு என காங்கிரஸில் உள்ள சிலர் கேட்பது அந்த கட்சியின் தலைமை கேட்பதாக தெரியவில்லை. இந்த கோரிக்கை என்பது கருத்து பரிமாற்றமே தவிர கூட்டணியில் எந்த சலசலப்பும் இல்லை.
விஜய் அரசியல் வருகையால் திமுக கூட்டணியில் சிறுபான்மையினர் வாக்கு சிதறும் என்ற கருத்து தொடர்பான கேள்விக்கு.
இன்னும் ஒரு தேர்தலை கூட விஜய் மற்றும் அவரது கட்சி சந்திக்கவில்லை. அவரது ரசிகர்களை வைத்துக்கொண்டு மாற்றம் வரும் எனக்கூறமுடியாது. தேர்தலில் மக்கள் அதற்கு தீர்ப்பளிப்பார்கள்
நாங்கள் போட்டியிட விரும்பும் 20 தொகுதிகளை தேர்ந்தெடுத்துள்ளோம். அதில் இருந்து 5 தொகுதிகளை திமுகவிடம் கேட்போம்.
நாங்கள் கேட்கும் 5 தொகுதிகளில் ஒரு தொகுதியில் பெண் வேட்பாளரை நிறுத்துவோம் என தெரிவித்தார்.
Hindusthan Samachar / P YUVARAJ