Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் மேற்கொள்ளப்படும் புனரமைப்பு பணியின் காரணமாக 45 நாட்களுக்கு மின்சார ரயில் சேவையில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டு உள்ளது.
சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் நடைபெற்று வரும் புனரமைப்பு
பணிகளால்., வழக்கமாக நடைமேடை
10 மற்றும் 11ல் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில்கள் பிப்ரவரி 20 தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரை நடைமேடை 5 மற்றும் 6 இயக்கப்படும் என செய்தி குறிப்பு வெளியிடப்பட்டு உள்ளது
மேலும்., சென்னை கடற்கரை - தாம்பரம் - செங்கல்பட்டு - காஞ்சிபுரம் - அரக்கோணம் இடையான அனைத்து மின்சார ரயில்களும் பிப்ரவரி 20 ம் தேதி முதல் ஏப்ரல் 5 ந் தேதி வரை நடைமேடை 6வது வழித்தடத்திலும் அதே போல் அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை கடற்கரை வரை 5 வது நடைமேடை வழிதாக இயக்கப்படும்.
பிப்ரவரி 20 ம் தேதி முதல் ஏப்ரல் 5 ம் தேதி வரையில் தற்போதுள்ள மின்சார ரயில் சேவைகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு புதிய மின்சார ரயில்களின் எண்கள், திருத்தப்பட்ட நேரங்களில் இயக்கப்பட உள்ள நிலையில் தற்காலிக நேர கால அட்டவணை இணைக்கப்பட்டு உள்ளது.
இந்த 45 நாட்களில் சென்னை கடற்கரை, தாம்பரம், செங்கல்பட்டு மார்க்கத்தில் ஞாயிற்றுக்கிழமை கால அட்டவணை கிடையாது.
Hindusthan Samachar / P YUVARAJ