ரூ.1.67 லட்சம் மதிப்புள்ள போதை பொருட்கள் பறிமுதல் - இருவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைப்பு!
கரூர், 17 பிப்ரவரி (ஹி.ச.) கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனையின் போது, அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.
Prison


கரூர், 17 பிப்ரவரி (ஹி.ச.)

கரூர் மாவட்டம், தவிட்டுப்பாளையம் சோதனைச் சாவடியில் நேற்று காவல்துறையினர் வாகன சோதனையின் போது, அப்போது அவ்வழியாக வந்த காரை மறித்து சோதனையிட்டதில், தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வரப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த சுரேந்தர் (25) மற்றும் ரவீந்திர பால் சிங் (20) ஆகிய இருவரை வேலாயுதம்பாளையம் போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடமிருந்து ரூ. 1,67,856 மதிப்புள்ள 401 கிலோ புகையிலை பொருட்கள், கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட கார் மற்றும் 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

கைது செய்யப்பட்ட இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

புகையிலைப் பொருட்கள் கடத்தியவர்களை கைது செய்த மூன்று காவலர்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜோஷ் தங்கையா பரிசு வழங்கி கௌரவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN