Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச)
நாடாளுமன்றத்தில் மட்டுமல்லாமல் களத்திலும் வலதுசாரிக் கருத்தியலுக்கு எதிராகத் தொடர்ந்து போராடி வரும் கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணியை கருத்தியல் ரீதியாக எதிர்கொள்ள முடியாமல் அருவருக்கத்தக்க தாக்குதலில் ஈடுபட்டிருக்கிறது கரூர் பாஜக தலைமை என மதுரை எம்.பி சு.வெங்கடேசன் எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
நான்கு நாட்களுக்கு முன்னால் பாஜக தமிழ்நாடு தலைவர் நயினார் நாகேந்திரனின் தரம் தாழ்ந்த பேச்சும் , கரூர் பாஜக தலைவரின் பேச்சும் தனித் தனி சம்பவங்கள் அல்ல.
பொதுவெளியில் அரசியல் பேசத் துணியும், போராடத் துணியும் ஒவ்வொரு பெண்ணையும் பற்றிய பாஜகவின் கருத்தியல் வெளிப்பாடு தான் இவை.
ஜோதிமணிக்கு எதிராகவும், பொதுச்சமூகத்தில் இயங்கும் பெண்களின் சுயமரியாதைக்கு எதிராகவும் தொடர்ந்து தாக்குதல் தொடுத்துவரும் பாஜகவினருக்கு வன்மையான கண்டனம் என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ