வரும் 25 ஆம் தேதி நள்ளிரவு முதல் லாரிகள் ஓடாது - தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவிப்பு
நாமக்கல், 17 பிப்ரவரி (ஹி.ச.) தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் தன்ராஜ் தலைமையில் இன்று (பிப்ரவரி 17 ஆம் தேதி) நாமக்கல்லில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த
Dhanraj


நாமக்கல், 17 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழ்நாடு மாநில லாரி உரிமையாளர்கள் சம்மேளனத்தின் அவசர செயற்குழு கூட்டம் தலைவர் தன்ராஜ் தலைமையில் இன்று (பிப்ரவரி 17 ஆம் தேதி) நாமக்கல்லில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு பின் மாநில தலைவர் தன்ராஜ் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் :-

15 ஆண்டுகளுக்கு மேல் பயன்பாட்டில் உள்ள லாரி மற்றும் பேருந்துகளுக்கு தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் 10 மடங்கு உயர்ந்துள்ளது.

10 மடங்கு எப்.சி புதுப்பிக்கும் கட்டணம் உயர்வால் எப்.சி புதுப்பிக்க முடியாமல் தமிழகம் முழுவதும் 1 இலட்சம் லாரி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

தகுதி சான்றிதழ் புதுப்பிக்கும் கட்டணம் 10 மடங்கு உயர்ந்துள்ளதை கண்டித்தும், அதனை திரும்பபெற வலியுறுத்தி வரும் 25 ம் தேதி நள்ளிரவு முதல் தமிழகம் முழுவதும் லாரிகள் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN