நெல்லையில் கவின் கொலை வழக்கு - சிபிசிஐடி , டிஎஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு
நெல்லை, 17 பிப்ரவரி (ஹி.ச.) நெல்லையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கவின் என்ற வாலிபர் காதலித்துள்ளார். இதனை அறிந்த அந்தப் பெண்ணின் தம்பி சுர்ஜித் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கவினை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் பெண்ணின் சகோதரர் சு
கவின்


நெல்லை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

நெல்லையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவரை கவின் என்ற வாலிபர் காதலித்துள்ளார்.

இதனை அறிந்த அந்தப் பெண்ணின் தம்பி சுர்ஜித் என்பவர் கடந்த ஆண்டு ஜூலை மாதம் பட்டப்பகலில் கவினை கொலை செய்தார். இந்த கொலை வழக்கில் பெண்ணின் சகோதரர் சுர்ஜித், அவரது தந்தை சப் இன்ஸ்பெக்டர் சரவணன், சுர்ஜித்துக்கு அடைக்கலம் கொடுத்ததாக ஜெயபால் ஆகியோரை

சி பி சி டி போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் சப் இன்ஸ்பெக்டர் சரவணன், நீதிமன்ற மதுரை கிளைகள் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார் அந்த மனுவில்

நெல்லையில் கவின் கொலை செய்யப்பட்ட வழக்கில் நான் சிறையில் உள்ளேன். திருநெல்வேலியில் உள்ள 2 வது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கில், சிபிசிஐடி போலீசார் தரப்பில், நெல்லை மாவட்ட நீதிமன்றத்தில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

இருந்தாலும், தற்போது வரை சிறையில் உள்ள எனக்கு , குற்றப்பத்திரிகை நகல், காவல் அறிக்கை, வழக்கு தொடர்பாக பிற ஆவனங்களையும்,

வழங்க வேண்டும்.

BNSS சட்ட பிரிவு படி கண்டிப்பாக வழங்க வேண்டும். ஆனால், இது வரை வழங்க வில்லை.

நான் விசாரணை நீதிமன்றத்தில் தொடர்ந்து ஆஜராகி, நகல் விண்ணப்பங்களை தாக்கல் செய்த போதிலும், கட்டாய ஆவணத்தை தொடர்ந்து வழங்க வில்லை.

இதனால் மனுதாரர் ஆவனங்கள் இல்லாததால் வாதங்களை தயார் செய்ய இயலவில்லை. வழக்கு விசாரணை ஒரு தலை பட்சமாக நடக்க வாய்ப்பு உள்ளது

எனவே,நெல்லையில் கவின் கொலை வழக்கு தொடர்பான வழக்கு காவல் துறை அறிக்கை, உள்ளிட்ட பிற ஆவனங்களை

வழங்க உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு நீதிபதி விக்டோரியா கவுரி முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஏன் இதுவரை வழங்கவில்லை என்பது குறித்து, நெல்லை சிபிசிஐடி, டிஎஸ்பி பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

Hindusthan Samachar / GOKILA arumugam