சீல் வைக்கப்பட்ட இடத்தில் கட்டுமான பணிகள் நடைபெற்றால் கடும் நடவடிக்கை - ஆட்சியர் எச்சரிக்கை
நீலகிரி, 17 பிப்ரவரி (ஹி.ச.) நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் இருந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் விதி மீறிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது. இதனால் விதி மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சென்ன
Lakshmi Bhavya Thaneeru


நீலகிரி, 17 பிப்ரவரி (ஹி.ச.)

நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் கட்ட பல்வேறு விதிமுறைகள் இருந்து வரும் நிலையில் பல்வேறு பகுதிகளில் விதி மீறிய கட்டிடங்கள் கட்டப்பட்டு வருவதாக குற்றசாட்டு எழுந்தது.

இதனால் விதி மீறி கட்டப்படும் கட்டிடங்களுக்கு சென்னை உயர் நிதிமன்ற உத்தரவுபடி சீல் வைக்கும் நடவடிக்கையில் மாவட்ட நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த வாரம் சீல் வைக்கப்பட்ட கட்டிடத்தில் அத்துமீறி நுழைந்த உரிமையாளர்கள் கட்டுமான பணியை மேற்கொண்ட தன் காரணமாக ஏழு பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

நீலகிரி மாவட்டத்தில் குடியிருப்பு மற்றும் வணிக கட்டிடங்கள் கட்ட அனுமதி கோரும் பொதுமக்கள் www.onlineppath.gov.in என்ற இணையதளம் வாயிலாக Single Window Portal ல் விண்ணப்பிக்கலாம்.

இது தொடர்பாக ஏற்படும் சந்தேகம் விபரங்கள் மற்றும் ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மாவட்ட ஆட்சியகரத்திலுள்ள (9442772701) என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டு இதே எண்ணிற்கு வாட்ஸ் அப் மூலமாகவும் விவரம் அனுப்பி தங்களது விண்ணப்பத்தின் நிலையினையும் அறிந்து கொள்ளலாம்.

அதேபோல் விதிமீறல்கள் நடைபெற்றால் உடனடியாக பொதுமக்கள் இந்த எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் என மாவட்ட ஆட்சித் தலைவர் தெரிவித்தார்.

மாவட்டம் முழுவதும் கட்டிடங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் முறையாக அனுமதி பெற்று கட்டப்படுகிறதா? அல்லது விதி மீறி கட்டப்பட்டு வருகிறதா? என அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாகவும் ஆய்வில் விதி மீறல்கள் இருப்பது கண்டறியப்பட்டாலோ அல்லது விதிமீறிய கட்டடங்களுக்கு சீல் வைக்கப்பட்ட பின் அதில் கட்டுமான பணிகளை மேற்கொண்டாலும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சுமி பவ்யா தண்ணீரு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மேலும் நீலகிரி மாவட்டத்தில் கட்டிடங்கள் முறையாக கட்டப்பட்டு வருகிறதா என்று ஆய்வு செய்ய தனிக்குழு அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணியும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தற்போது 900 மேற்பட்ட கட்டிடங்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாகவும் 75 கட்டடங்களுக்கு முழுமையாக சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த மாவட்ட ஆட்சித் தலைவர் 27 ஆம் தேதி நீதிமன்ற வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் நீதிமன்ற விசாரணைக்கு பின் அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என

தெரிவித்தார்.

Hindusthan Samachar / ANANDHAN