மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டி அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் சங்கம் முதலமைச்சரிடம் நியாயம் கேட்டு போராட்டம்
சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலிய
Ye


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை சேப்பாக்கம் சிவானந்தா சாலையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர்ந்து 8வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டனர்.

1500 ரூபாயாக உள்ள உதவித்தொகையை 6 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி கொடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 200க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளிகள் கலந்துகொண்டு தங்கள் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

தொடர்ந்து எட்டாவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மாற்றத்திறனாளிகள் முதலமைச்சரிடம் நியாயம் கேட்டு பேரணியாக செல்ல முயன்ற நிலையில் காவல்துறையினர் கைது செய்து பேருந்தில் ஏற்றினர்.

Hindusthan Samachar / P YUVARAJ