புதுக்கோட்டை அருகே ஜல்லிக்கட்டு போட்டி விறுவிறுப்பு
புதுக்கோட்டை, 17 பிப்ரவரி (ஹி.ச.) புதுக்கோட்டை மாவட்டம் அதிக வாடிவாசல் கொண்டதாகும். புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் பொன்மாசிலிங்க அய்யனார் கோவிலில் மகா சிவராத்திரியைமுன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி விமர்சையாக நடைபெற
ஜல்லிக்கட்டு


புதுக்கோட்டை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

புதுக்கோட்டை மாவட்டம் அதிக வாடிவாசல் கொண்டதாகும்.

புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே உள்ள இடையாத்தூரில் பொன்மாசிலிங்க

அய்யனார் கோவிலில் மகா சிவராத்திரியைமுன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி

விமர்சையாக நடைபெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு தொடங்குவதற்கு முன்னதாக இலுப்பூர் வருவாய் கோட்டாட்சியர்

ஜல்லிக்கட்டு உறுதி மொழியை வாசிக்க வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள்

ஏற்றுக்கொண்டனர்.

இந்த ஜல்லிக்கட்டில் புதுக்கோட்டை மாவட்டம் மட்டுமன்றி மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருவாரூர், திருச்சி, திண்டுக்கல், தேனி ,ராமநாதபுரம் உள்ளிட்ட

பல்வேறு மாவட்டங்களிலிருந்து வந்திருந்த 850 காளைகளும் 300 மாடு பிடி

வீரர்களும் பங்கேற்றுள்ளனர். இந்த ஜல்லிகட்டு போட்டி 8 சுற்றுகளாக நடைபெற

உள்ளது .வாடிவாசலில் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக அவிழ்க்கப்பட்ட காளைகள் துள்ளி குதித்து சீறிப் பாய்ந்து வந்ததை மாடுபிடி வீரர்கள் மல்லுக்கட்டி தழுவினர். இதனை பார்வையாளர்கள் ரசித்து வருகின்றனர்.

இந்த ஜல்லிக்கட்டில் சிறந்த முறையில் காளைகளை தழுவிய மாடுபிடி வீரர்களுக்கும் நீண்ட நேரம் வீரர்களை திணறடித்து களமாடிய காளைகளுக்கும் சைக்கிள் கட்டில்,

பீரோ, டைனிங் டேபிள், சில்வர்பாத்திரங்கள், பேன், மிக்ஸி குக்கர், கிரைண்டர், வெள்ளி காசு, ரொக்கப்பணம் உள்ளிட்டவைகள் பரிசாக

வழங்கப்பட்டு வருகிறது.

காளைகள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட பிறகே வாடிவாசலுக்குள்

அனுமதிக்கப்பட்டு வருகிறது.மேலும் 100க்கும் மேற்பட்ட காவல்துறையினர்

பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

அதேபோல் சுகாதாரத்துறை கால்நடைத்துறை

வருவாய்த்துறை தீயணைப்பு துறை உள்ளிட்ட பல்வேறு துறைகள் கண்காணிப்பில் இந்த ஜல்லிக்கட்டு நடைபெற்றது.

இந்த ஜல்லிக்கட்டு போட்டியை சுற்று வட்டார பகுதியை சேர்ந்த ஆயிரத்திற்கும்

மேற்பட்டோர் கண்டு ரசித்து வருகின்றனர்.

Hindusthan Samachar / GOKILA arumugam