காதல் தொல்லையால் பத்தாம் வகுப்பு மாணவி தூக்கிட்டு தற்கொலை
ராமநாதபுரம், 17 பிப்ரவரி (ஹி.ச.) ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் கோகுல் நகரை சேர்ந்த ஜெயப்பிரியா என்பவரின் மகள் மகாஸ்ரீ அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார். அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவன் சாதிக் எ
Graphical representation on suicide deaths


ராமநாதபுரம், 17 பிப்ரவரி (ஹி.ச.)

ராமநாதபுரம் மாவட்டம் தேவிப்பட்டினம் கோகுல் நகரை சேர்ந்த ஜெயப்பிரியா என்பவரின் மகள் மகாஸ்ரீ அங்குள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.

அதே பள்ளியில் அதே வகுப்பில் படித்த மாணவன் சாதிக் என்பவன் தொடர்ந்து காதலிக்குமாறு வற்புறுத்தியதாகவும் பள்ளிக்கு போகும் போதும் வரும் போதும் இருசக்கர வாகனத்தில் துரத்தி வந்து காதலிக்குமாறு வற்புறுத்தி வந்ததாக தெரிகிறது.

இதுகுறித்து தாயாரிடம் அந்த மாணவி கூறியதை அடுத்து மாணவியின் தாயார் பள்ளியில் புகார் செய்ததை தொடர்ந்து அந்த மாணவனை பள்ளியில் இருந்து இடைநீக்கம் செய்துள்ளனர்.

இருந்தபோதிலும் அந்த மாணவி பள்ளிக்கு வரும்போதும் போகும்போதும் வீதியில் செல்லும்போது இருசக்கர வாகனத்தில் தொடர்ந்து வந்து தன்னை காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர் செய்து வந்ததாக தெரிகிறது.

தொடர்ந்து மிரட்டியதாகவும் அந்த மாணவியின் தாயார் தெரிவித்தார். இந்த நிலையில் மிரட்டலுக்கு பயந்து மாணவி மகா ஸ்ரீ இன்று வீட்டில் யாரும் இல்லாத நிலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

சக மாணவன் காதலிக்குமாறு வற்புறுத்தி டார்ச்சர் செய்ததால் தன்னுடைய மகள் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக தாயாரும் உறவினர்களும் கதறி அழுக காட்சி சோகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

மாணவியின் சாவுக்கு காரணமான மாணவன் மீது நடவடிக்கை எடுக்கும் வரை மருத்துவமனையில் இருந்து உடலை வாங்க போவதில்லை என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

Hindusthan Samachar / ANANDHAN