Enter your Email Address to subscribe to our newsletters

கேரளா, 17 பிப்ரவரி (ஹி.ச.)
சபரிமலை தங்க கொள்ளை சம்பவம் தொடர்பாக கேரள காவல்துறை பதிவு செய்த வழக்கை
சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் அமலாக்கத்
துறையும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது.
கருப்பு பணம் பரிமாற்றம் நடைபெற்றதாக கண்டறியப்பட்டதை தொடர்ந்து அமலாக்கத்துறை இவ்
விவகாரத்தில் களமிறங்கி விசாரணை மேற் கொண்டு வருகிறது விசாரணையின் ஒரு பகுதியாக விசாரிப்பதற்காக ஏற்கனவே நோட்டீஸ் வழங்கப்பட்டது அதன் அடிப்படையில்
அவர் இன்று கொச்சி அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வாய்ப்புள்ளதாக தகவல்
வெளியாகிய நிலையில் தற்போது கொச்சியில் அமைந்துள்ள அமலாக்கத்துறை அலுவலகத்தில்
நேரில் நடிகர் ஜெயராம் ஆஜராகி உள்ளார்.
சென்னையில் உள்ள இவரது வீட்டில் உன்னி
கிருஷ்ணன் போற்றி சென்றது தொடர்பாகவும் அவரது வீட்டிலேயே துவாரபாலவர் சிலை
கொண்டு செல்லப்பட்டு பூஜை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் அமலாக்கத்துறை
அதிகாரிகள் விசாரணை செய்ய உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில்
அமலாக்கத்துறை அலுவலகத்திற்கு வரும்போது செய்தியாளரிடம் தெரிவித்த போது நான்
சொல்ல வேண்டிய அனைத்தையும் அமலாக்கத்துறையிடம் கட்டாயம் கூறுவேன் எனவும்
தெரிவித்துள்ளார்.
மேலும் பிடிபட வேண்டியவர்கள் பிடிபடட்டும் எனவும்
தெரிவித்துள்ளார். விசாரணை முழுமையாக முடிந்த பின்னரே பல்வேறு புதிய தகவல்கள்
வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Hindusthan Samachar / GOKILA arumugam