Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
தெற்கு ரெயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, ஹோலி பண்டிகைக் கொண்டாட்டத்திற்காக எர்ணாகுளத்தில் இருந்து பீகார் மாநிலத்தின் முசாபர்பூருக்கு சிறப்பு ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.
அதற்கான விவரங்கள் பின்வருமாறு:
எர்ணாகுளத்தில் இருந்து மார்ச் மாதம் 20, 27 தேதிகளிலும், ஏப்ரல் மாதம் 6, 13, 20, 27 ஆகிய தேதிகளிலும் (வெள்ளிக்கிழமைகளில்) இரவு 9.30 மணிக்கு வண்டி எண்.06085 என்ற சிறப்பு ரெயில் புறப்பட்டு, கோவை, திருப்பூர், ஈரோடு, சேலம், ஜோலார்பேட்டை, காட்பாடி, அரக்கோணம், பெரம்பூர் மார்க்கமாகப் பயணித்து, நான்காம் நாள் காலை 7.30 மணிக்கு முசாபர்பூரைச் சென்றடையும்.
திரும்பும் வழியில், முசாபர்பூரில் இருந்து மார்ச் 23, மற்றும் மார்ச் 2, 9, 16, 23, 30 ஆகிய தேதிகளில் (திங்கட்கிழமைகளில்) இரவு 9.15 மணிக்கு வண்டி எண்.06086 என்ற சிறப்பு ரெயில் புறப்பட்டு, அதே வழித்தடத்தில் பயணித்து நான்காம் நாள் காலை 10.30 மணிக்கு எர்ணாகுளம் வந்தடையும்.
இந்த ரெயில்களுக்கான முன்பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8 மணி முதல் தொடங்க உள்ளது.
Hindusthan Samachar / JANAKI RAM