Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
டாஸ்மாக் பணியாளர் சங்கங்களின் கூட்டமைப்பு பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி பிப்ரவரி 18ம் தேதி முதல் டாஸ்மாக் கடைகளை அடைத்து விட்டு காலவரையற்ற போராட்டத்தில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளது.
டாஸ்மாக் நிறுவனத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக தொகுப்பூதியத்தில் பணியாற்றி வரும் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு அரசு ஊழியர்களுக்கு இணையாக ஊதியம் மற்றும் ஓய்வூதிய பலன்களை வழங்க வேண்டும். டாஸ்மாக்கில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். டாஸ்மாக் பணியாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டும். டாஸ்மாக் கடைகளில் காலி பாட்டில்களை திரும்ப பெறும் நடைமுறையில் உள்ள சிக்கல்களை களைய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற உள்ளது.
ஏற்கெனவே இதே கோரிக்கைகளை முன்வைத்து ஏ.ஐ.டி.சி, சி.ஐ.டி.யூ போராட்டம் நடத்தி வரும் நிலையில் மற்ற தொழிற்சங்கங்களும் இணைந்து இதனை வலுப்படுத்தியுள்ளன.
முதலில் இன்று
(பிப்ரவரி 17ம் தேதி) முதல் கடையடைப்பு போராட்டத்தை நடத்தப்போவதாக அறிவித்து இருந்த நிலையில், இப்போது கடையடைப்பு போராட்டத்தை பிப்ரவரி 18ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளனர்.
ஆகையால் நாளை இரவு முதல் கடைகளை அடைத்தபின்பு சாவிகளை ஒப்படைத்து விட்டு போராட்டம் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
Hindusthan Samachar / vidya.b