போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு - நிதியமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு
சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.) தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகின்றார். அதில் அவர் பேசியது, உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
Rs. 13,062 crore allocated for the transport sector


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்ஜெட்டை இன்று நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து வருகின்றார்.

அதில் அவர் பேசியது,

உயர்கல்வித்துறைக்கு ரூ.8,505 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. பொறியியல் கல்லூரிகளில் 7.5% இட ஒதுக்கீட்டில் பயின்ற மாணவர்களுக்கு கல்வி, விடுதி கட்டணமாக ரூ.1,512 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இடைக்கால பட்ஜெட்டில் பள்ளிக் கல்வித் துறைக்கு ரூ.48,534 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ரூ.902 கோடியில் கோவை, நெல்லை, திருச்சியில் நூலகம் அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாட்டில் இதுவரை 6,75,885 மாணவர்களுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டுள்ளன.

கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின்கீழ் கூடுதலாக 1 லட்சம் வீடுகள் கட்டப்படும். ஏற்கனவே 1.71 லட்சம் கோடி வீடுகள் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தில் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. தமிழ்ப் புதல்வன் திட்டத்தில் 5,40,511 மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். புதுமைப்பெண் திட்டத்தில் 6,95,296 மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்.

மகளிர் பெயரில் பதிவாகும் 10 லட்சம் ரூபாய்க்கு குறைவான பத்திரப் பதிவுகளுக்கு, பதிவுக் கட்டணம் 1% குறைக்கப்பட்டுள்ளது. இதுவரை 3.71 லட்சம் பெண்கள் பத்திரப் பதிவு கட்டண குறைப்பால் பயன்பெற்றுள்ளனர்.

தொழில் முதலீடுகள் பெருமளவில் ஈர்க்கப்பட்டுள்ளன. இதுவரை 36 லட்சம் வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 13.3 லட்சம் கோடி ரூபாய் அளவிற்கு 1179 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. விழுப்புரம், தஞ்சாவூர், வேலூர், காரைக்குடி ஆகிய இடங்களில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன. தொழில்துறைக்கு 4882 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு செமி கண்டக்டர் இயக்கம் எதிர்வரும் 5 ஆண்டுகளுக்கான செயல்திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. கப்பல் கட்டுமானம், கப்பல் இயங்கு துறைகளில் முதலீடுகளை ஈர்க்கும் வகையில் கப்பல் கட்டும் தொழில் கொள்கை விரைவில் வெளியிடப்பட்டுள்ளது. தொழில்துறைக்கு 4882 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மருத்துவத்துறைக்கு ரூ.22,090 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நலன் காக்கும் ஸ்டாலின் முகாம் மூலம் 17 லட்சம் பேர் பயன் பெற்றுள்ளனர். இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 5.11 லட்சம் பேர் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது, இதற்காக ரூ.413 கோடி செலவிடப்பட்டுள்ளது. மகப்பேறு நிதி உதவி திட்டத்திற்கு ரூ.4,000 கோடி நிதி விடுவிக்கப்பட்டுள்ளது.

1943 கோடி ரூபாய் சிறு,குறு நடுத்தர தொழில் துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது. 95 சதவிகித கிராமங்களுக்கு அதிவேக இணைய வசதி ஏற்படுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. தகவல் தொழில்நுட்பத்துறைக்கு 219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கடந்த 5 ஆண்டுகளில் ஆட்சேபனையற்ற அரசு நிலங்களில் வசிப்போருக்கு ஒருமுறை சிறப்பு வரன்முறைப்படுத்தும் திட்டத்தில் 77,800 இணையவழி பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன.

தமிழ்நாடு போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மகளிர் விடியல் பயண திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.4,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகள் ரூ..6,121 கோடியில் ரூ.12,087 புதிய பேருந்துகள் வாங்கப்பட்டுள்ளன. ரூ..361 கோடியில் 3,673 பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.

சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளில் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு 10 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 40 லட்சத்துக்கும் மேற்பட்ட சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் உள்ளன.

இவ்வாறு அவர் அறிவிப்புகளை கூறி வருகின்றார்.

Hindusthan Samachar / vidya.b