Enter your Email Address to subscribe to our newsletters


சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச)
கடந்த ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை வெளியிட்ட அரசை நோக்கி தமிழக பாஜக சார்பாக சில கேள்விகள் கேட்கப்படுவதாக எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது,
கடந்த ஆண்டுக்கான பொருளாதார அறிக்கை என்னும் பெயரில், வெற்றுப் புகழ் மடலை திமுக அரசு வெளியிட்டுள்ள நிலையில், முதல்வர் முக.ஸ்டாலினிடம் சில கேள்விகள்:
உங்களது ஆட்சியின் கடைசி நிதிநிலை அறிக்கையை இன்று சமர்ப்பிக்கும் போது, கடந்த ஐந்தாண்டுகளில் நடந்த ஊழல்கள் பற்றிய அறிக்கையும் சமர்ப்பிக்கப்படுமா?
வெளிநாட்டிற்கு இன்பச்சுற்றுலா சென்று, இதுவரை தாங்கள் ஈர்த்த முதலீடுகள் மற்றும் அதனால் உருவான வேலைவாய்ப்புகள் பற்றிய வெள்ளை அறிக்கையை வெளியிட முடியுமா?
ஆட்சி அரியணை ஏறி ஐந்து வருடங்கள் முடியும் தருவாயில், 2021-இல் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளான காஸ் சிலிண்டர் மானியம், மாதந்தோறும் மின்கட்டணக் கணக்கீடு, ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பாளர்களுக்கான நிதியுதவி போன்றவை இந்த பட்ஜெட்டிலாவது இடம்பெறுமா?
பல நாட்களாக தொடர்ந்து போராடி வரும் ஆசிரியர்கள், தூய்மைப் பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், மருத்துவர்கள், மாற்றுத்திறனாளிகள் ஆகியோரின் கண்ணீருக்கு, தேர்தல் நெருங்குவதைக் கருத்தில் கொண்டாவது விடை காணப்படுமா?
பெருகிவரும் மாநிலத்தின் கடன் சுமையை குறைக்காவிட்டாலும் பரவாயில்லை, மேலும் உயர்த்தாமல் இருக்கவாவது ஏதேனும் வழிமுறை கண்டறியப்படுமா?
மொத்தத்தில், திமுக அரசால் இன்று தாக்கல் செய்யவிருக்கும் இடைக்கால பட்ஜெட்டாவது உருப்படியாக இருக்குமா? அல்லது பல நூறு காகிதங்கள் அடங்கிய வெற்று ஏமாற்றக் குவியலாக மட்டுமே இருக்குமா? என்று அவர் அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ