ஏழுமலையான் கோயிலில் அமெரிக்க கிரிக்கெட் வீரர்கள் தரிசனம்
திருப்பதி, 17 பிப்ரவரி (ஹி.ச.) T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள ஆட்டக்காரர்கள் ஐந்து பேர் இன்று திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டனர். சாமி கும்பிடுவதற்காக நேற்று இ
திருப்பதி


திருப்பதி, 17 பிப்ரவரி (ஹி.ச.)

T20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற்று வரும் நிலையில் அமெரிக்க

கிரிக்கெட் அணியில் இடம் பெற்றுள்ள ஆட்டக்காரர்கள் ஐந்து பேர் இன்று திருப்பதி கோவிலில் ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிடுவதற்காக நேற்று இரவு திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் இன்று காலை

கோவிலுக்கு சென்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் ஏழுமலையானை வழிபட்டனர்.

சாமி கும்பிட்ட பின் அவர்களுக்கு தீர்த்த பிரசாதங்கள் வழங்கப்பட்ட நிலையில் வேத பண்டிதர்கள் வேத ஆசி வழங்கினர்.

Hindusthan Samachar / GOKILA arumugam