அருணாசலேஸ்வரர் கோவிலில் நடிகர் சிவகார்த்திகேயன் சாமி தரிசனம்
திருவண்ணாமலை, 17 பிப்ரவரி (ஹி.ச.) பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே தமிழ், தெலுங்கு, ஆந்திரா உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த திரைப்பட நடிகர், நடிகைகள், இசையமைப்பாள
Sivakarthikeyan


திருவண்ணாமலை, 17 பிப்ரவரி (ஹி.ச.)

பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்கும் திருவண்ணாமலை மாநகரில் அமைந்துள்ள அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு கடந்த சில மாதங்களாகவே தமிழ், தெலுங்கு, ஆந்திரா உள்ளிட்ட மொழிகளை சேர்ந்த திரைப்பட நடிகர், நடிகைகள், இசையமைப்பாளர்கள், இயக்குனர்கள், மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், முக்கிய பிரமுகர்கள் என அனைவரும் வருகை தந்து அண்ணாமலையாரை வழிபட்டு, பின்னர் கோவில் பின்புறம் உள்ள மலையை சிவனாக எண்ணி 14 கிலோ மீட்டர் சுற்றளவு கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் மேற்கொண்டு வருகின்றனர்.

அந்த வகையில் இன்று திருவண்ணாமலைக்கு வருகை தந்த நடிகர் சிவகார்த்திகேயன் அண்ணாமலையாருக்கு நடைபெற்ற சிறப்பு அபிஷேகத்தில் கலந்து கொண்டு வழிபாடு செய்தார், முன்னதாக சம்பந்த விநாயகரை வணங்கியவர், தொடர்ந்து உண்ணாமலை அம்மன் உடனாகிய அண்ணாமலையாரை தனது பிறந்த நாளை முன்னிட்டு மனைவியுடன் சாமி தரிசனம் செய்தார்.

அருணாசலேஸ்வரர் கோவில் நிர்வாகம் சார்பில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு மாலை மற்றும் பிரசாதங்கள் வழங்கப்பட்டது, கோயிலுக்கு வந்திருந்த நடிகர் சிவகார்த்திகேயனுடன் அவரது ரசிகர்கள் குடும்பத்துடன் புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனர்.

Hindusthan Samachar / ANANDHAN