மதுபோதையில் ஓட்டி வந்த டிப்பர் டிராக்டர்  மோதி 81 செம்மறி ஆடுகள் பலி - 20-க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயம்
திருச்சி, 17 பிப்ரவரி (ஹி.ச.) திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார். இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ் என்பவர் கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு வளர்க்கும் தொழில் ஈடுபட்டு வருகிறார். இந்நில
ஆடுகள்


திருச்சி, 17 பிப்ரவரி (ஹி.ச.)

திருச்சி மாவட்டம், லால்குடி அருகே உள்ள தச்சங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர்

சிவக்குமார்.

இவரது மகன் பி.இ பட்டதாரியான நித்திஸ் என்பவர் கடந்த 4 வருடமாக செம்மறி ஆடு

வளர்க்கும் தொழில் ஈடுபட்டு வருகிறார்.

இந்நிலையில் நேற்று வழக்கம்போல ஆடுகளை மேய்த்து விட்டு மாலையில் 250 ஆடுகளை சிறுகனூர் சாலையில் ஓட்டி வந்துக்கொண்டிருந்தார்.

அப்போது அந்த வழியாக இரண்டு டிப்பருடன் சர்க்கரை ஆலைக்கு கரும்பு ஏற்றிச் சென்ற டிராக்டர் ஆடுகள் மீது மோதியது.

இதில் 81 ஆடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானது. மேலும் 20க்கும் மேற்பட்ட ஆடுகள் படுகாயமடைந்தது.

தகவலறிந்த காணக்கிளியநல்லூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் டிராக்டரை ஓட்டி வந்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த நல்லதம்பி என்பவர் தலைக்கேறிய மது போதையில் வாகனத்தை தாறுமாறாக இயக்கி விபத்தை ஏற்படுத்தியது தெரியவந்தது.

இந்த சம்பவம் குறித்து காணக்கிளியநல்லூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மதுபோதையில் ஓட்டி வந்த டிப்பர் டிராக்டர் மோதிய விபத்தில் 81 செம்மறி ஆடுகள் பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Hindusthan Samachar / GOKILA arumugam