Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 17 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட தமிழ்நாடு இடைக்கால நிதிநிலை அறிக்கையை அமைச்சர் தங்கம் தென்னரசு 2:22 மணி நேரம் வசித்து முடித்தார்.
இதையடுத்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார்.
வேளாண் இடைக்கால பட்ஜெட் வாசிக்கப்படும் நிலையில், திமுக எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பச்சை துண்டு அணிந்துள்ளனர்.
வேளாண் பட்ஜெட்டில் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கூறியதாவது,
5 ஆண்டுகளில் மாநிலம் முழுவதும் 28 வேளாண் கருத்துக் கேட்பு கூட்டங்கள் நடத்தப்பட்டுள்ளன. அனைத்து கிராமங்களில் வேளாண் வளர்ச்சி அடைய கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. 10,000 சிறுபாசன குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
800 தரம் பிரிப்பு கூடங்களுடன் கூடிய உர கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன. ரூ.178 கோடி செலவில் மண்ணுயிர் காத்து மன்னுயிர் காப்போம் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. கோவையில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளது. மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளில் உரிய நேரத்திற்கு திறக்கப்பட்டது.
தென்னை விவசாயிகளுக்கு ஏற்படும் பாதிப்புகளை தடுக்க வேளாண் துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும். தமிழ்நாடு அரசின் நடவடிக்கையால் வேளாண் பரப்பு 3 லட்சம் ஏக்கர் அதிகரிப்பு.
496 பட்டதாரி இளைஞர்கள், வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் வழங்கப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் பரப்பளவில் சிறுதானியங்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் உரையாற்றி வருகின்றார்.
Hindusthan Samachar / vidya.b