Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
தமிழக சட்டப்பேரவையில் இன்று கேள்வி நேரத்தின் போது, மயிலம் தொகுதி பாமக உறுப்பினர் சிவகுமார் பேசுகையில்,
விழுப்புரம் மாவட்டம் மயிலம் தொகுதிக்குட்பட்ட வல்லம் ஒன்றியத்தில் மாம்பட்டு கிராமத்தில் நியாய விலை கடை கட்டிடத்தை சீரமைக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.
அதற்கு கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில்,
பொதுமக்களின் நலனை காக்கக்கூடிய வகையில் அனைத்து வசதிகளையும் செய்து தர முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து கூட்டுறவு துறை சார்பில் 1,931 புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுள்ளதோடு, 2,554 புதிய நியாய விலை கடைகள் திறக்கப்பட்டுள்ளது.
1,300க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரே நியாய விலை கடை இருப்பது குறித்து பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.
என்று கூறினார்.
Hindusthan Samachar / vidya.b