Enter your Email Address to subscribe to our newsletters

புதுடெல்லி, 18 பிப்ரவரி (ஹி.ச.)
நாடு முழுவதும், தமிழகம் உட்பட காலியாக இருக்கும் 37 ராஜ்ய சபா எம்.பி. பதவிகளுக்கான தேர்தல் எப்பொழுது நடக்கும் என்ற விவரம் வெளியிடப்பட்டுள்ளது.
விருப்ப மனுவை சமர்ப்பிக்கும் படலம் வரும் 26-ம் தேதி ஆரம்பமாகிறது.
மார்ச் மாதம் 5-ம் தேதிக்குள் வேட்பு மனுவை தாக்கல் செய்ய வேண்டும்.
மனுவை வாபஸ் வாங்கிக்கொள்ள 9-ம் தேதி வரை அவகாசம் உள்ளது.
தேர்தல் மார்ச் 16-ம் தேதி நடைபெறும்.
என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் தம்பிதுரை, ஜி.கே. வாசன், என்.ஆர். இளங்கோ, கனிமொழி சோமு, திருச்சி சிவா, பி. செல்வராசு போன்றவர்களின் பதவி காலம் ஏப்ரல் 2-ம் தேதியோடு முடிவடைகிறது.என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / JANAKI RAM