Enter your Email Address to subscribe to our newsletters

சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச)
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவராக இருந்தவர் ஆம்ஸ்ட்ராங்.
அவர் கொலை செய்யப்பட்ட பிறகு தமிழகத்தில் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி விலகி புதிதாக கட்சி தொடங்கி விட்டார். ஆனந்தன் மாநில தலைவராக செயல்பட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங்கிற்கு நெருக்கமாக இருந்தவரும் பகுஜன் சமாஜ் கட்சியின் திருவள்ளூர் மாவட்ட தலைவருமான சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர் முகமது அப்பாஸ் பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் தன்னை இணைத்துகொண்டார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி முன்னிலையில் முகமது அப்பாஸ் அதிமுகவில் இணைந்தார்.
இது தொடர்பாக முகமது அப்பாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
பாராளுமன்றம் மற்றும் சட்ட மன்றம் மற்றும் சென்னை மாநகராட்சி தேர்தல்களில் நேரடியாக போட்டியிட்ட அனுபவம் பெற்றுள்ளேன்.
ஆம்ஸ்ட்ராங் மறைவிற்கு பிறகு பகுஜன் சாமாஜ் கட்சியின் அமைப்பு செயல்பாடுகளில் இருந்து விலகி பொது சேவை மற்றும் சமூக பணிகளில் மட்டும் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
மேலும் அதிமுக ஆட்சிக் காலத்தில் சிறுபான்மை மக்களுக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பு வாக்குறுதி மட்டுமல்ல நடைமுறை உண்மையாக இருந்தது.
இன்றைய அரசியல் சூழலில் சிறுபான்மை மக்களின் பெயரை பயன்படுத்தி பேச்சும் விளம்பரமும் மட்டுமே செய்யும் போலி மதச்சார்பின்மை அவர்களுக்கு உண்மையான பாதுகாப்பை வழங்கவில்லை.
ஆனால் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் குறிப்பாக மாண்புமிகு ஐயா அவர்கள் தலைமையில் அமைதியாகவும், விளம்பரம் இன்றியும் சிறுபான்மை மக்களின் வாழ்க்கையில் நிஜமான பாதுகாப்பினை வழங்கிய ஆட்சி என்பதினை வரலாறு பதிவு செய்துள்ளது.
அதிமுக கரங்களை வலுப்படுத்துவது சிறுபான்மை மக்களின் எதிர்கால பாதுகாப்பினை வலுப்படுத்துவதாகும் என்பதே என் உறுதியான அரசியல் முடிவு.
அதனால் அதிமுகவில் இணைத்து கொண்டேன் என்று அறிக்கையில் முகமது அப்பாஸ் தெரிவித்துள்ளார்.
Hindusthan Samachar / P YUVARAJ