Enter your Email Address to subscribe to our newsletters

தூத்துக்குடி, 18 பிப்ரவரி (ஹி.ச)
இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டதை நினைவு கூரும் வகையில், ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் கடைப்பிடிக்கும் 40 நாட்கள் தவக்காலம் இன்று சாம்பல் புதன் வழிபாட்டுடன் தொடங்கியது.
பாளையங்கோட்டையில் தூய சவேரியார் பேராலயத்தில் காலை 6 மணிக்கு சாம்பல் புதன் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பலால் திருச்சிலுவை அடையாளம் வரையப்பட்டது. இதுபோல், திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் அனைத்து கிறிஸ்தவ ஆலயங் களிலும் சாம்பல் புதன் பிரார்த் தனைகள் நடைபெற்றன.
தூத்துக்குடியில் உள்ள உலகப் புகழ்பெற்ற பனிமய மாதா பேராலயம், திரு இருதய பேராலயம், புனித அந்தோணியார் திருத்தலம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்பு பிரார்த்தனைகள் மற்றும் திருப்பலிகள் நடைபெற்றன.
தவக்காலத்தின் தொடக்கமாக அனுசரிக்கப்படும் இந்நாளில் மீனவர்கள் பாரம்பரியமாக கடலுக்கு செல்வதைத் தவிர்த்து, வழிபாடுகளில் பங்கேற்றனர்.
இதன் காரணமாக சுமார் 272 விசைப்படகுகள் துறைமுகத்திலேயே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தவக்காலத்தின் போது பெரும்பாலான கிறிஸ்தவர்கள் தங்களுக்கு விருப்பமான உணவுகளை தவிர்த்து, கடுமையான விரதத்தை கடைபிடிப்பார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Hindusthan Samachar / vidya.b