பிராட்வே-யை தொடர்ந்து கிண்டியிலும் அமையும் ஒருங்கிணைந்த போக்குவரத்து முனையம் - திட்ட அறிக்கையை தயாரிக்க டெண்டர் கோரியது சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம்
சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச) சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் தடத்திலும், தாம்பரம் - பிராட்வே பேருந்து வழித்தடத்திலும், கிண்டி முக்கிய மையமாக உள்ளது. கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில், ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலக
Guindy


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச)

சென்னை கடற்கரை - தாம்பரம் ரயில் தடத்திலும், தாம்பரம் - பிராட்வே பேருந்து வழித்தடத்திலும், கிண்டி முக்கிய மையமாக உள்ளது.

கிண்டியை சுற்றியுள்ள பகுதிகளில், ஐ.டி., நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு மற்றும் தனியார் அலுவலகங்கள் இருப்பதால், பயணியர் கூட்டம் எப்போதும் அதிகமாக இருக்கும். தினமும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் இங்கு வந்து செல்கின்றனர்.

ஏற்கனவே அம்ரித் பாரத் திட்டத்தின் கீழ், கிண்டி ரயில் நிலையம், 13.50 கோடி ரூபாயில் மேம்படுத்தப்பட்டு வரும் நிலையில்

கிண்டி ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டியுள்ள சுரங்கப்பாதை அருகில், இடம் தேர்வு செய்யப்பட்டு போக்குவரத்து பேருந்து முனையம் அமைக்கப்பட உள்ளது..

பிராட்வே , மந்தவெளி, வடபழனியில் அமைய உள்ளது போல நவீன பேருந்து முனையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பொழுதுபோக்கு அம்சங்களுடன் அமைக்க மெட்ரோ நிர்வாகம் திட்டமிட்டுள்ளது..

கிண்டி பேருந்து ரயில், மெட்ரோ ரயில்கள் இணையும் முக்கிய சந்திப்பாக உருவெடுத்துள்ளது. எனவே, தற்போதுள்ள கிண்டி பேருந்து நிலையத்தை, பல்நோக்கு ஒருங்கிணைந்த போக்குவரத்து வளாகமாக மாற்றி

நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம், வணிக வளாகம், வாகன நிறுத்துமிடங்கள், பேருந்து, ரயில், மெட்ரோ ரயில் நிலையங்களை இணைக்கும் பிரமாண்ட நடைமேடை மேம்பாலம், எஸ்கலேட்டர்கள், வெளிப்புற நடைபாதைகள், இணைப்பு வாகன வசதி நிறுத்தும் இடம் ஆகியவை அமைக்கப்பட உள்ளன.

அதுபோல், கிழக்கு கடற்கரை சாலை வழியாக செல்லும் வெளியூர் பேருந்துகளை அதிகரிக்கலாம். இதற்கான, சாத்திய கூறு அறிக்கையுடன், விரிவான திட்ட அறிக்கை, நில பயன்பாடு ஆகிய பணிகளும் இதில் மேற்கொள்ளப்பட உள்ளதாக டெண்டரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ