தனியார் பேருந்து திடீரென தீப்பிடித்து எரிந்து விபத்து
கேரளா, 18 பிப்ரவரி (ஹி.ச.) கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒற்றப்பாலம் பகுதி வழியாக பயணிகளுடன் தனியார் பேருந்து ஓடிக் கொண்டிருந்தது அப்போது பேருந்தில் முன் பகுதியில் இருந்து தீ படர்ந்த நிலையில் இதனை சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் விரைந்த
தீ விபத்து


கேரளா, 18 பிப்ரவரி (ஹி.ச.)

கேரள மாநிலம் பாலக்காடு அருகே ஒற்றப்பாலம் பகுதி வழியாக பயணிகளுடன் தனியார் பேருந்து ஓடிக் கொண்டிருந்தது

அப்போது பேருந்தில் முன் பகுதியில் இருந்து தீ

படர்ந்த நிலையில் இதனை சுதாரித்துக் கொண்ட பேருந்து ஓட்டுநர் விரைந்து பேருந்ந்தை சாலையிலேயே நிறுத்தினார்.

உடனடியாக அப்பகுதி மக்கள் பேருந்துக்குள்

அமர்ந்திருந்த பயணிகளை விரைந்து மீட்டு வெளியேற்றினர். தொடர்ந்து தீயணைப்புத்

துறையினரின் உதவியுடன் பேருந்தின் தீயணைக்கப்பட்டது. பேருந்தில் அடிப்பகுதியில்

காணப்பட்ட டீசல் குழாய் உடைந்த நிலையில் அதிலிருந்து தீ பிடித்ததோடு பேருந்தில் பரவியதாக கூறப்படுகிறது.

இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும்

பரபரப்பு நிலவியது.

இந்த நிலையில் இந்த காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை

ஏற்படுத்தி வருகிறது.

Hindusthan Samachar / GOKILA arumugam