சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறைக்கான பட்ஜெட் அறிவிப்பு
சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.) சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறைக்கான பட்ஜெட் அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை, சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள 360 சுகாதார மையங்களில் கருப்பை வாய் புற்று
Corporation


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)

சென்னை மாநகராட்சியின் பொது சுகாதாரத்துறைக்கான பட்ஜெட் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அந்த பட்ஜெட்டில் இடம்பெற்றிருப்பவை,

சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள 360 சுகாதார மையங்களில் கருப்பை வாய் புற்று நோய் உருவாக்கும் எச்.பி.வி. (HPV) வைரஸ் கண்டறிய பரிசோதனை மேற்கொள்ள எச்.பி.வி, டி.என்.ஏ (HPV DNA), RTPCR கிட் 50,000 எண்ணிக்கையில் ரூ.1.00 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களின் உள்ள சுகாதார மையங்களில் பணிபுரியும் 720 செவிலியர்கள் மற்றும் காச நோய் களப்பணியாளர்களுக்கு டேப்லெட் கணினி (Tablet) ரூ.2.50 கோடி செலவில் கொள்முதல் செய்தல்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள மக்களைத்தேடி மருத்துவப் பிரிவில் பணியாற்றும் 600 களப்பணியாளர்களுக்கு ஒரே மாதிரியான மருத்துவம் சார்ந்த உடைமைகள் வைக்கும் பை (Medical Kit Bag) ரூ.50.00 இலட்சம் செலவில் வழங்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட 1 முதல் 15 மண்டலங்களில் உள்ள சுகாதார மையங்களில் மின்னணு அறிவிப்பு பலகைகள் (Digital Boards) 60 சுகாதார மையங்களுக்கும் ரூ.50.00 இலட்சம் செலவில் அமைக்கப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் 1 முதல் 15 மண்டலங்களுக்குட்பட்ட உள்ள 15 மருத்துவ மண்டலங்களில் உள்ள 15 சுகாதார மையங்களில் 7 நடமாடும் ஊடுகதிர் (X-Ray) இயந்திரத்தின் வழியாக எடுக்கப்படும் ஊடுகதிர்களை செயற்கை நுண்ணறிவு (AI) வழியாக ஆய்வறிக்கை வழங்க ஏதுவாக செயற்கை நுண்ணறிவு மென்பொருள் மற்றும் மென்பொருளை செயல்படுத்குவதற்கான உபகரணங்கள் ரூ.1 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்து பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள பழுதடைந்த மாவட்ட காசநோய் மருத்துவமனைக்குப் பதிலாக, புதிய கட்டடம் கட்டும் பணிகள் ரூ.5.00 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் கீழ் வரும், தொற்று நோய் மருத்துவமனையில் புறநோயாளி பிரிவுக்காக புதிய கட்டடம் ரூ.6.00 கோடி மதிப்பீட்டில் கட்டப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட1 முதல் 15 மண்டலங்களில் உள்ள 341 சுகாதார மையங்களில் உள்ள கட்டடங்களை சீரமைத்தல் மற்றும் பழுதுபார்ப்பு பணிகள் மேற்கொள்வதற்கு ஒரு வட்டாரத்திற்கு ரூ. 5.00 கோடி வீதம் 3 வட்டாரங்களில் ரூ.15.00 கோடி மதிப்பீட்டில் சுகாதார மையங்கள் சீரமைக்கப்படும்.

அனைத்து தெரு நாய்களுக்கும் மாபெரும் அளவிலான வெறிநாய்க்கடி நோய்த் தடுப்பூசி மற்றும் அகப்புற ஒட்டுண்ணி நீக்கும் மருந்து செலுத்தும் திட்டத்தை செயல்படுத்த ரூ.3.50 கோடி மதிப்பீட்டில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும்.

பெருநகர சென்னை மாநகராட்சியின் வடக்கு வட்டாரத்தில் சுகாதாரமான புதிய இறைச்சிக்கூடம் நிறுவப்படும்.

மேலும், தெற்கு வட்டாரத்தில் புதிய இறைச்சிக்கூடம் நிறுவுவதற்கு விரிவான திட்ட அறிக்கை (Detailed Project Report) தயாரிக்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / P YUVARAJ