Enter your Email Address to subscribe to our newsletters

மதுரை, 18 பிப்ரவரி (ஹி.ச.)
சிவகங்கை மருத்துவமனையில் நர்ஸ்களாக பணிபுரிந்த மெலன்ஷியா செல்வகுமாரி உட்பட 7
பேர், 2014 மற்றும் 2016 க்கு இடையில் மதுரை அரசு மருத்துவமனையில் மாற்று
பணியில் (டெபுடேசன்) ஈடுபடுத்தப்பட்டனர்.
இவர்கள் 2025 நவம்பர்வரை பணியில் தொடர அனுமதிக்கப்பட்டனர்.
மாற்றுப்பணி உத்தரவை மருத்துவக் இயக்குனர்
நவம்பர் -25 ல் ரத்து செய்தார்.
இதனடிப்படையில் மெலன்ஷியா செல்வகுமாரி உள்ளிட்டோர் முதலில் பணிபுரிந்த
இடங்களுக்கு அனுப்ப மதுரை அரசு மருத்துவமனை டீன் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்து மதுரை அரசு மருத்துவமனை காலிப் பணியிடங்களில்
தங்களை தொடர அனுமதிக்க உத்தரவிட வேண்டும் என மெலன்ஷியா செல்வகுமாரி உள்ளிட்ட
8 பேர் உயர்நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கை விசாரணை செய்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு.
பல்வேறு மருத்துவமனைகளில் பணிபுரிந்த நர்ஸ்கள் 2014 முதல் மதுரை அரசு
மருத்துவமனையில் மாற்றுப் பணியில் நியமிக்கப்பட்டனர். அவர்கள் 12 ஆண்டுகள்
தொடர்ந்து பணியாற்ற அனுமதித்ததை கண்டு இந்நீதிமன்றம் ஆச்சரியமடைகிறது.
நகர வாழ்க்கையின் வசதிகள், சிறந்த கல்வி வாய்ப்புகள் காரணமாக அனைவரும்
நகரத்தில் தங்க விரும்புவது உண்மை.
கிராமப்புற மக்களின் தேவைகளும் கவனிக்கப்பட வேண்டும். டாக்டர்கள்
கிராமப்புறங்களைவிட நகரங்களில் நல்ல வருவாய் ஈட்டும் மருத்துவப் பணியில் ஈடுபட
வாய்ப்புகள் அதிகம் உள்ளன. அனைவரும் நகர மருத்துவமனைகளில் பணிபுரிய தயாராக
உள்ளனர்.
இந்த மாற்றுப் பணி நியமன மனப்பான்மையை ஊக்குவித்தால், கிராமப்புறங்களில்
வசிக்கும் ஏழை மக்களின் தேவைகள் ஒருபோதும் கருத்தில் கொள்ளப்படாது. நமது தவறுகளை ஏற்றுக்கொண்டு, துறையை சீர்திருத்தம் செய்யும் தைரியம் நமக்கிருக்க வேண்டும்.
எனவே அரசு மருத்துவ மணைகளில் மாற்றுப்பணியிலுள்ள டாக்டர்கள், நர்ஸ்களின்
விபரங்களை சுகாதாரத்துறை தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்.
உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்துள்ளார்.
Hindusthan Samachar / GOKILA arumugam