இன்று வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வலிமை பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்
சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.) நேற்றைய தினம், வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காணப்பட்டது. இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல்
சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)  r2  இன்று வங்கக் கடலில் மையம் கொண்டுள்ள காற்றழுத்தத் தாழ்வு பகுதி, வலிமை பெறும் - இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல்  நேற்றைய தினம், வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காணப்பட்டது.  இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று தனது தீவிரத்தை அதிகரிக்கும் என்று வானிலை மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.  நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.  எனினும், நாளை மறுநாள் கடலோர தமிழகம் மற்றும் தென்தமிழக உள் மாவட்டங்களில் இதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எதிர்வரும் 21-ஆம் தேதி மிதமான மழை பொழியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை அதிகாலை வேளையில் மெல்லிய பனி படர்ந்து காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.  சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சி அளிக்கும். அதிகாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சென்னை, 18 பிப்ரவரி (ஹி.ச.)

நேற்றைய தினம், வங்கக்கடல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம், இந்தியப் பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் காணப்பட்டது.

இது மேற்கு மற்றும் வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து, தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள இந்தியப் பெருங்கடலில் இன்று தனது தீவிரத்தை அதிகரிக்கும் என்று வானிலை மையம் முன்னறிவிப்பு செய்துள்ளது.

நாளை வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலையே நிலவும்.

எனினும், நாளை மறுநாள் கடலோர தமிழகம் மற்றும் தென்தமிழக உள் மாவட்டங்களில் இதமான மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் எதிர்வரும் 21-ஆம் தேதி மிதமான மழை பொழியும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டின் வடக்குப் பகுதிகளில் இன்று மற்றும் நாளை அதிகாலை வேளையில் மெல்லிய பனி படர்ந்து காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

சென்னையைப் பொறுத்தவரை, இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காட்சி அளிக்கும். அதிகாலை நேரத்தில் ஒரு சில இடங்களில் லேசான பனிமூட்டம் நிலவும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Hindusthan Samachar / JANAKI RAM